சாண்டுர் கணவாய்

சாண்டுர் கணவாய் (Shandur Top) உலகின் கூரை என அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானில் உள்ள கிசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 12,200 அடி உயரத்தில் (3,700 மீட்டர்) அமைந்துள்ளது. இதன் இருபுறமும் கில்கிட் - பால்டிஸ்டான் மற்றும் சிட்ரால் நகரங்கள் அமைந்துள்ளன. ஸாண்டுர் கணவாய் சிட்ராலுக்கும் கில்கிட்-பால்டிஸ்டானுக்கும் இடையேயான முக்கியமான போக்குவரத்துப் பாதையாகும்.[1][2] இருபுறமும் வாழும் மக்கள் கோவார் மொழியில் பேசுகின்றனர்.

சாண்டுர் கணவாய்
ஏற்றம்12,200 அடி (3,719 மீ)
அமைவிடம்கீசர் , கில்கிட் - பால்டிஸ்டான்
ஆள்கூறுகள்36°09′54″N 72°45′29″E / 36.16500°N 72.75806°E / 36.16500; 72.75806
ஆப்கான் மலைக் கணவாய்கள்
சாண்டுர் ஏரி

சாண்டூர் போலோ திருவிழா தொகு

இங்கே உள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் முதல் வாரத்தில் கில்கிட் - பால்டிஸ்டான் அணிக்கும் சிட்ரால் அணிக்கும் இடையே போலோ விளையாட்டு நடைபெறும். இங்கு 1936ஆம் ஆண்டிலிருந்து போலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவர். இப்போட்டியின் போது பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெறுகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "William and Kate invited to Shandur: Aqil Shah". DAWN.COM (in ஆங்கிலம்). 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
  2. "PASSES". www.gilgitbaltistanscouts.gov.pk. Archived from the original on 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
  3. "Shandur Polo Festival I Book Now I Hunza Guides Pakistan". Hunza Guides Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டுர்_கணவாய்&oldid=3612886" இலிருந்து மீள்விக்கப்பட்டது