சாதவ் பயேங்க்

சாதவ் பயேங்க் (Jadav Payeng) ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியாகும். 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட என்னற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாற்றியிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளையும் நட்டு வளர்த்துள்ளார். இவருடைய எதிர்காலத் திட்டம் இவ்வனப்பகுதியை உலகின் மிகப்பெரிய நதிக்கரைத் தீவாக மாற்றுவதாகும்.[1][2]

சாதவ் பயேங்க்
பிறப்புசாதவ் பயேங்க்
1963
அசாம், இந்தியா
மற்ற பெயர்கள்முலாய்
பணிவனம் வளர்ப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
1980– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பினிதா பயேங்க்

தொழில் தொகு

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மர கன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர்.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ, அசாம் மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை என்று சுமார் 20 வருடங்களாக உழைத்து வருகிறார்.

இல்லற வாழ்க்கை தொகு

காட்டிற்குள்ளேயே மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்வதற்குப் போதுமான சிறிய குடில் ஒன்றை அமைத்திருக்கிறார். வருமானத்திற்காக, சில மாடுகளை வளர்த்து அதன் பாலை விற்று குடும்பச் செலவைப் பார்த்துக் கொள்கிறார்.[3]

எதிர்காலத் திட்டங்கள் தொகு

“இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார், சாதவ் பயேங்க்.[4]

அங்கீகாரம் தொகு

இவர் வளர்த்த காடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக வரத்துவங்கியது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் இக்காடு வர ஆரம்பித்துள்ளது.

விருதுகள் தொகு

  • இந்திய காடுகள் வளர்க்கும் மனிதர்
  • பத்மஸ்ரீ 2015ஆம் ஆண்டு[5]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. http://www.ajithkumar.cc/my-thoughts/one-of-the-greatest-achievements-of-the-human-race-jadav-payeng/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
  3. "காட்டை உருவாக்கிய தனிமரம்!". தினமணி. சூலை 8, 2012. பார்க்கப்பட்ட நாள் சூலை 11, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார்!
  5. தி இந்து தமிழ், உயிர்மூச்சு இணைப்பு, பெப்ரவரி. 7. 2005

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதவ்_பயேங்க்&oldid=3553388" இலிருந்து மீள்விக்கப்பட்டது