சாதாரண வெள்ளிக்கோல் வரையன்
சாதாரண வெள்ளிக்கோல் வரையன் | |
---|---|
இந்திய ஓநாய் பாம்பு Mangaon, மகாராட்டிரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. aulicus
|
இருசொற் பெயரீடு | |
Lycodon aulicus (L., 1758) | |
வேறு பெயர்கள் | |
இந்திய ஓநாய் பாம்பு அல்லது சாதாரண வெள்ளிக்கோல் வரையன் (Lycodon aulicus) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இப்பாம்புகள் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகின்றன.
விளக்கம்
தொகுஇந்த பாம்பு வேறுபட்ட வண்ணங்களில் உள்ளது. இந்த பாம்புபை கண்டு கட்டுவிரியன் என குழம்பி கொன்றுவிடுகிறார்கள். இப்பாம்பு சாம்பல்,பழுப்பு அல்லது கருமை நிறமும். பத்துமுதல் இருபது வெள்ளை அல்லது மஞ்சள் நிறப்பட்டைகள் கொண்டிருக்கும். இதன் கரியகண்கள் முன்புறம் துருத்தியபடி இருக்கும். இதன் கண்மணி புலப்படாது. இப்பாம்புகளில் சிறிய இனங்களின் தோல் மெல்லியதாக ஒளி ஊடுருவக்கூடிய வகையில் இருக்கும் இதனால் இதன் உள்ளுருப்புகளை எளிதாகக் காணவியலும். இதன் தலை தட்டையாக லேசான கூர்மையுடன், இருக்கும். இதன் செதில்கள் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் தோன்றும். இதன் உடலுன் அடிப்பகுதி வெளுத்துக் காணப்படும்.
பரவல்
தொகுஇப்பாம்பு பாக்கித்தான் ,இலங்கை , இந்தியா (வடக்கே இமயமலை மற்றும் அசாம் ; மகாராஷ்டிரா), வங்கதேசம் , நேபாளம் , மியான்மார் ( பர்மா), தாய்லாந்து. மலேசியா , இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் , சீசெல்சு , மாலத்தீவு, மொரிசியஸ், சீனா ( புஜியான் மாகாணம், குவாங்டாங் யுன்னான் , ஹாங்காங் போனற பகுதிகள்), இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவின் தென்கிழக்கு கரையோரங்களில் கிடைப்பதற்கரியதாய் உள்ளது . பிலிப்பைன்சின் சில தீவுகளில் மட்டும் காணக்கூடியதாய் உள்ளது .
நடத்தை
தொகுஇந்தப் பாம்பு இரவு நேரங்களில் மட்டும் நடமாடக்கூடியது. பகலில் தன் இருப்பிடத்திலேயே இருக்கும்.
உணவு
தொகுஇதன் முதன்மை உணவு பல்லிகள், தவளைகள், அரணை போன்றவை ஆகும். கிட்டத்தட்ட அதன் முதன்மை உணவு என்றால் அரணைதான் இதன் தாடைகளில் அமைந்த முன் "கோரை பற்கள்" உணவைக் கடிக்கவும் பல்லிகளை தப்பவிடாமல் பிடித்துக்கொள்ளவும் உதவுகிறது.
இனப்பெருக்கம்
தொகுபெண் பாம்புகள் ஆண் பாம்புகளை விடப் பெரியதாய் இருக்கும். அவை பருவ மழை தொடங்கும் முன் இனப்பெருக்கம் செய்கின்றன. நான்கு முதல் பதினோரு முட்டைகளை இடுகின்றன.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் குஞ்சு பொரித்து வருகின்றன குஞ்சுகள் சராசரி 14-19 செ.மீ (5½-7⅜ அங்குலம்) நீளம்வரை இருக்கும். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the Snakes in the British Museum (Natural History), Volume I. London.
- ↑ Das, I. 2002. A Photographic Guide to Snakes and Other Reptiles of India Ralph Curtis Books. Sanibel Islands, Florida., p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5