சாந்தி சிறீஸ்கந்தராசா

(சாந்தி சிறீஸ்கந்தராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாந்தி சிறீஸ்கந்தராசா (Shanthi Sriskantharajah, பிறப்பு: 28 அக்டோபர் 1965)[1] இலங்கைத் தமிழ் நிருவாக சேவை அதிகாரியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
இலங்கை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1965 (1965-10-28) (அகவை 59)
முள்ளியவளை, முல்லைத்தீவு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்துணுக்காய்
முன்னாள் கல்லூரிமதுரை பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
வேலைநிருவாக சேவை அதிகாரி

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சிறீஸ்கந்தராஜா முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் கல்வி கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பில் ஈடுபட்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இலங்கை நிருவாக சேவையில் இணைந்து துணுக்காய் பிரதேச சபையில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றினார். ஈழப்போரின் இறுதிக் காலத்தில் எறிகணை வீச்சினால் படுகாயமடைந்து தனது இடது காலை இழந்தவர்.[2]

அரசியலில்

தொகு

சாந்தி சிறீஸ்கந்தராசா 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 18,080 வாக்குகள் பெற்றார். எனினும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4][5][6] பின்னர் இவர் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[7]

சமூகப் பணி

தொகு

துணுக்காயில் மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து ஒளிரும் வாழ்வு என்ற அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Shanthi Sriskandarasa". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 "போரின் வலி எனக்குத் தெரியும்': சாந்தி சிறிஸ்கந்தராசா". பிபிசி தமிழோசை. 31 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  5. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.
  6. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2015.
  7. "Two defeated candidates for TNA national list". ஏசியன் டிரிபியூன். 24 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_சிறீஸ்கந்தராசா&oldid=3243535" இலிருந்து மீள்விக்கப்பட்டது