சானோ தேவி
சானோ தேவி (Shanno Devi) (பிறப்பு:1 ஜூன் 1901) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற சபாநாயகர் ஆவார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.[1] இவர் டிசம்பர் 6, 1966 முதல் மார்ச் 17, 1967 வரை அரியானா சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார்.[2][3] பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக மார்ச் 19, 1962 முதல் அக்டோபர் 31, 1966 வரை இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுதேவி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகர மேற்கு தொகுதியிலும் (1951 முதல் 1957 வரை) ஜகாத்ரி தொகுதியிலும் (1962 முதல் 1966 வரை) காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தேவி முதன்முதலில் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பஞ்சாப் சட்டமன்றத்தில் 1940இல் முல்தான் கங்கா ராமின் மகனை சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1946ஆம் ஆண்டில் தனது நெருங்கிய போட்டி வேட்பாளரை 19000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதே இடத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 1951ஆம் ஆண்டு தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். மேலும் இவர் பாரதிய ஜனசங்கின் பிரகாஷ் சந்தை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] 1962ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் ஜே. எஸ்ஸின் இந்தர் சைனை சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] டிசம்பர் 6, 1966 அன்று, இவர் அரியானா சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக பணியாற்றினார். இவர் துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதேவி பிரிக்கப்படாத இந்தியாவில் முல்தான் என்னும் நகரில் பிறந்தார். இவரது தந்தை லால் சைட் ராம் கண்ணா அரசு ஊழியர் ஆவார். தேவி ஜலந்தரில் உள்ள கன்யா மஹா வித்யாலயாவில் பட்டம் பெற்றார். இவர் மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இவர் பஞ்சாப் சட்டமன்றத்திலும், பின்னர் அரியானா சட்டமன்றத்திலும் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chander, Prakash (2003). first woman deputy speakers in India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176484558. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ "Haryana Legislative Assembly speaker". legislativebodiesinindia.nic.in. Archived from the original on 13 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ "only woman to occupy a prominent position was Shanno Devi, the first Speaker of the Haryana Vidhan Sabha". tribuneindia.com. Archived from the original on 28 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "1940 & 1946 election of Multan". 1950. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ "Election Results in Amritsar City West, Punjab". elections.traceall.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ "Election Results in Jagadhri, Punjab". elections.traceall.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
- ↑ "Haryana Review, September 2009, Vol 23 Issue 8" (PDF). Haryana Review. p. 12. Archived from the original (PDF) on 17 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
- ↑ "List of Successful Candidates in Punjab Assembly Election in 1962". elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.