சான்ட்டா கிளாரா, கலிபோர்னியா

சான்ட்டா கிளாரா (Santa Clara, /ˌsæntəˈklærə/) கலிபோர்னியா மாநிலத்தில் சான்ட்டா கிளாரா மாவட்டத்தில் உள்ளதோர் நகரமாகும். 1777இல் இங்கு நிறுவப்பட்டிருந்த எசுப்பானிய குடியேற்றத்தை ஒட்டி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 116,468 ஆகும்; சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் ஒன்பதாவது மிகுந்த மக்கள்தொகை உள்ள இடமாக இது உள்ளது.

சான்ட்டா கிளாரா, கலிபோர்னியா
நகரம்
சான்ட்டா கிளாரா நகரம்
சான்ட்டா கிளாரா கருத்தரங்கு மையம் - சூலை 2007
சான்ட்டா கிளாரா கருத்தரங்கு மையம் - சூலை 2007
சான்ட்டா கிளாரா, கலிபோர்னியா-இன் கொடி
கொடி
சான்ட்டா கிளாரா மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைவிடம்
சான்ட்டா கிளாரா மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் கலிபோர்னியா
மாவட்டம்Flag of Santa Clara County, California.png சான்ட்டா கிளாரா மாவட்டம்
நிறுவல்சூலை 5, 1852[1]
அரசு
 • வகைமன்றம்-ஆணையர்[2]
 • நகர மன்றம்[4]மேயர் லிசா கில்மோர்
பேட் கோல்சுடாடு
டேபி டேவிசு
ஜெர்ரி மார்சலி
டொமினிக் ஜே. காசெர்ட்டா
தெரசா ஓ'நீல்
கேத்தி வாடனபி
 • நகர ஆணையர்யூலியோ ஜே. புயன்டெசு[3]
பரப்பளவு[5]
 • மொத்தம்18.407 sq mi (47.675 km2)
 • நிலம்18.407 sq mi (47.675 km2)
 • நீர்0 sq mi (0 km2)  0%
ஏற்றம்[6]72 ft (22 m)
மக்கள்தொகை (ஏப்ரல் 1, 2010)[7]
 • மொத்தம்1,16,468
 • Estimate (2014)[7]1,22,192
 • தரவரிசைமாவட்டத்தில் மூன்றாவது
கலிபோர்னியாவில் 48ஆவது
 • அடர்த்தி6,300/sq mi (2,400/km2)
நேர வலயம்பசிபிக் (ஒசநே−8)
 • கோடை (பசேநே)பசிபிக் (ஒசநே−7)
சிப் குறியீடுகள்95050–95056
அழைப்புக் குறிகள்408/669
இணையதளம்www.santaclaraca.gov

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 45 மைல்கள் (72 km) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1777இல் நிறுவப்பட்டது; 1852இல் நகரமாயிற்று. கிறித்தவத்தை பழங்குடியினரிடம் பரப்புவதற்காக கலிபோர்னியாவில் நிறுவப்பட்ட 21 எசுப்பானிய சமயச் சபைகளில் எட்டாவது, மிசன் சான்ட்டா கிளாரா டெ அசிசு, இங்கு அமைந்திருந்தது. இதுவே இந்நகருக்குப் பெயர் காரணமாயிற்று.[8] இந்த சமயச்சபையும் பூங்காவும் தற்போதைய சான்ட்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் புரவலர் புனிதராக புனித கிளாரா உள்ளார்.[9]

சான்ட்டா கிளாரா சிலிக்கான் பள்ளத்தாக்கின் மையத்தில் உள்ளது. இன்டெல் போன்ற பல உயர்நுட்ப நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. கலிபோர்னியாவின் மிகத் தொன்மையான கல்விக்கூடமான சான்டா கிலாரா பல்கலைக்கழகம் இங்குள்ளது. என்.எஃப்.எல். போட்டிகளில் சான்பிரான்சிஸ்கோ 49வர்களின் தாயக விளையாட்டரங்கமாக விளங்கும் லீவைசு விளையாட்டரங்கம் இங்கு அமைந்துள்ளது. இதனைச் சுற்றி சான் ஓசே, சன்னிவேல், கூபர்டினோ நகரங்கள் உள்ளன.

மேற்சான்றுகள்தொகு

  1. "California Cities by Incorporation Date". California Association of Local Agency Formation Commissions. நவம்பர் 3, 2014 அன்று மூலம் (Word) பரணிடப்பட்டது. August 25, 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. "Government". City of Santa Clara. April 20, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "City Manager". City of Santa Clara. September 19, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Councilmembers". City of Santa Clara. January 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. வார்ப்புரு:Cite US Gazetteer
  6. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. அணுகப்பட்டது November 18, 2014. 
  7. 7.0 7.1 "Santa Clara (city) QuickFacts". United States Census Bureau. April 14, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. Gannett, Henry (1902). "The Origin of Certain Place Names in the United States". Bulletin of the United States Geological Survey (United States Geological Survey) (197): 231. https://books.google.com/books?id=5UHwAAAAMAAJ&pg=PA231. பார்த்த நாள்: April 24, 2014. 
  9. "Santa Clara University Ethnobiographical Background பரணிடப்பட்டது 2010-05-28 at the வந்தவழி இயந்திரம்." சான்டா கிலாரா பல்கலைக்கழகம். Retrieved on March 13, 2010.

வெளி இணைப்புகள்தொகு