சான் பிரான்சிஸ்கோ விரிகுடா

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா (San Francisco Bay) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள, அந்த மாநிலத்தின் நாற்பது விழுக்காடு நீரும் சேருகின்ற ஆழமற்ற கயவாய் ஆகும். சாக்ரமென்ட்டோ மற்றும் சான் யோக்குவைன் ஆறுகளிலிருந்தும் சியாரா நெவாடா மலைகளிலிருந்தும் நீர் இந்த விரிகுடா வழியாக அமைதிப் பெருங்கடலை அடைகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், இரண்டு ஆற்றுநீரும் சுவிசுன் விரிகுடாவில் விழுந்து பின்னர் கார்குயினெசு நீரிணை வழியாக நாப்பா ஆற்றில் சான் பாப்லோ விரிகுடா நுழைவில் கலக்கின்றன; சான் பாப்லோ விரிகுடாவின் தென்முனை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவுடன் இணைக்கிறது. இருப்பினும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த அனைத்து விரிகுடாக்களுமே பொதுவாக சான் பிரான்சிஸ்கோ விரிகுடா என்று அழைக்கப்படுகின்றன.

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா
ஆள்கூறுகள்37°42′30″N 122°16′49″W / 37.70833°N 122.28028°W / 37.70833; -122.28028
வகைவிரிகுடா
ஆற்று மூலங்கள்சாக்ரமென்ட்டோ ஆறு
சான் யோக்குவைன் ஆறு
பெருங்கடல்/கடல் மூலங்கள்அமைதிப் பெருங்கடல்
வடிநில நாடுகள்அமெரிக்க ஐக்கிய நாடு
அதிகபட்ச நீளம்60 mi (97 km)
அதிகபட்ச அகலம்12 mi (19 km)
மேற்பரப்பளவு400 முதல் 1,600 sq mi (1,000 முதல் 4,100 km2)
குடியேற்றங்கள்சான் பிரான்சிஸ்கோ
ஓக்லண்ட்
சான் ஹொசே

இது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி (பெரும்பாலும் விரிகுடாப் பகுதி அல்லது பே ஏரியா) என அறியப்படுகின்ற தொடர்ச்சியான நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாந்து, சான் ஒசே போன்ற பெரிய நகரங்கள் அமைந்துள்ளன. அமைதிப் பெருங்கடலிலிருந்து சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கான நீரிணை நுழைவாயில் கோல்டன் கேட் (தங்கக் கதவு) என அழைக்கப்படுகின்றது. இந்த நீரிணையின் குறுக்கேதான் புகழ்பெற்ற கோல்டன் கேற் பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிகுடா பெப்ரவரி 2, 2013இல் பன்னாட்டுச் சிறப்புமிக்க இராம்சர் நீர்ப்பகுதி என அறிவிக்கபட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்

தொகு
  1. "The Ramsar List of Wetlands of International Importance". Ramsar Convention on Wetlands. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)