சாமனியப் பேரரசு
சாமனியப் பேரரசு (Samanid Empire) (பாரசீக மொழி: سامانیان, romanized: சாமனியன்) என்பது ஈரானிய தெககன் பூர்வீகத்தை கொண்ட ஒரு பாரசீக சன்னி முஸ்லிம் பேரரசு ஆகும். இது சாமனிய அரசமரபு, சாமனிய அமீரகம், அல்லது எளிமையாக சாமனியர் என்றும் அழைக்கப்படுகிறது. இது குராசான் மற்றும் திரான்சாக்சியானா ஆகிய பகுதிகளில் தனது மையத்தை கொண்டிருந்தது. இதன் உச்சபட்ச பரப்பளவு உருவாக்கத்தின்போது பாரசீகம் மற்றும் நடு ஆசியாவை 819 முதல் 999 வரை உள்ளடக்கியிருந்தது.
சாமனியப் பேரரசு سامانیان | |
---|---|
819–999 | |
தலைநகரம் | |
பேசப்படும் மொழிகள் | |
சமயம் | சன்னி இசுலாம் (சிறுபான்மை சியா இசுலாம், நெசுத்தோரியக் கிறித்தவம், சரதுசம்) |
அரசாங்கம் | வாரிசு வழி முடியரசு |
அமீர் (எமீர்) | |
• 819–864/5 | அகமது இப்னு ஆசாத் |
• 999 | இரண்டாம் அப்தல் மாலிக் |
வரலாற்று சகாப்தம் | நடுக்காலம் |
• தொடக்கம் | 819 |
• முடிவு | 999 |
பரப்பு | |
928 மதிப்பீடு.[6][7] | 2,850,000 km2 (1,100,000 sq mi) |
நூகு, அகமது, இயகியா மற்றும் இலியாசு ஆகிய நான்கு சகோதரர்கள் சாமனிய அரசை நிறுவினர். அப்பாசிய முதன்மை நிலைக்குக் கீழ் தங்கள் நிலப்பரப்புகளை ஒவ்வொருவரும் ஆண்டனர். 892இல் இசுமாயில் சாமனி (892-907), சாமனிய அரசை ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒன்றிணைத்தார். இவ்வாறாக சாமனியர்களால் பயன்படுத்தப்பட்ட நில மானிய முறைமையை முடிவுக்கு கொண்டு வந்தார். இவருக்கு கீழ் தான் சாமனியர்கள் அப்பாசிய அதிகாரத்திலிருந்து தனித்து இயங்க ஆரம்பித்தனர். எனினும், 945 வாக்கில் அரசாங்கமானது நடைமுறையில் துருக்கிய இராணுவ அடிமை பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சாமனிய குடும்பத்தின் அதிகாரமானது முற்றிலும் பெயரளவில் மட்டுமே என்றானது.
சாமனியப் பேரரசு ஈரானிய இடைக் காட்சியின் ஒரு பகுதியாகும். இக்கால கட்டத்தில் பாரசீக கலாச்சாரத்தின் உருவாக்கம் மற்றும் அடையாளமானது ஈரானிய பேச்சு மற்றும் பழக்க வழக்கங்களை இசுலாமிய உலகத்திற்குள் கொண்டு வந்தது. இது துருக்கிய-பாரசீக கலாச்சாரத்தின் உருவாக்கத்திற்கு பங்களித்தது.[8]
சாமனியர்கள் கலைக்கு ஊக்கம் கொடுத்தனர். அறிவியல் மற்றும் இலக்கிய முன்னேற்றத்திற்கு காரணமாயினர். உருதகி, பிர்தௌசி மற்றும் அவிசென்னா போன்ற அறிஞர்களை இது ஈர்த்தது. சாமனிய கட்டுப்பாட்டின் கீழ் புகாராவானது பகுதாதுவிற்குp போட்டியாக பெயர் பெற்றிருந்தது.[9] புயியர்கள் மற்றும் சபாரியர்களைக் காட்டிலும் பாரசீக மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு மீண்டும் புத்துயிர் பெற சாமனியர்கள் காரணமாக இருந்தனர் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் அறிவியல் மற்றும் சமய ஆய்வுகளுக்கு அரபு மொழியை தொடர்ந்து பயன்படுத்தினர். சாமனியர்கள் தங்களை சாசானியப் பேரரசின் வழித் தோன்றல்களாகக் கருதினர்.[10][9] ஒரு புகழ்பெற்ற கல்வெட்டில் சாமனிய அரசாங்கமானது "இங்கு, இப்பகுதியில், மொழி பாரசீகம், இந்த பகுதியின் மன்னர்கள் பாரசீக மன்னர்கள்" என்று அறிவித்திருந்தனர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Persian Prose Literature." World Eras. 2002. HighBeam Research. (September 3, 2012);"Princes, although they were often tutored in Arabic and religious subjects, frequently did not feel as comfortable with the Arabic language and preferred literature in Persian, which was either their mother tongue—as in the case of dynasties such as the Saffarids (861–1003), Samanids (873–1005), and Buyids (945–1055)...". [1]
- ↑ Elton L. Daniel, History of Iran, (Greenwood Press, 2001), 74.
- ↑ Frye 1975, ப. 146.
- ↑ Paul Bergne (15 June 2007). The Birth of Tajikistan: National Identity and the Origins of the Republic. I.B.Tauris. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84511-283-7.
- ↑ Frye 1975, ப. 145.
- ↑ Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 12 September 2016.
- ↑ Taagepera, Rein (1997). "Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia". International Studies Quarterly 41 (3): 475–504. doi:10.1111/0020-8833.00053. https://escholarship.org/uc/item/3cn68807.
- ↑ Canfield L., Robert (2002). Turko-Persia in Historical Perspective. Cambridge University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52291-5.
- ↑ 9.0 9.1 9.2 The History of Iran by Elton L. Daniel, pg. 74
- ↑ Frye 1975, ப. 145-146.