சாமுவேல் ஹானிமன்
ஓமியோபதி நிறுவனர்
கிறிஸ்டியன் பிரைட்ரிச் சாமுவேல் ஹானிமன் (Christian Friedrich Samuel Hahnemann, 10 ஏப்ரல் 1755[1] – 2 சூலை 1843) என்பவர் ஜெர்மனிய மருத்துவரும், ஓமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.
சாமுவேல் ஆனிமன் Samuel Hahnemann | |
---|---|
சாமுவேல் ஹானிமன் | |
பிறப்பு | மெய்சென், செருமனி | 10 ஏப்ரல் 1755
இறப்பு | 2 சூலை 1843 பாரிசு, பிரான்சு | (அகவை 88)
தேசியம் | செருமானியர் |
துறை | ஓமியோபதி |
இவர் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஜெர்மனியில் மிசென் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிறித்தியான் காட்ப்ரைடு ஹானிமன். இவரது தாய் பெயர் ஜோஹானா கிறிஸ்டியனா. இவர் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( leipzig university) அலோபதி மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( erlangen university) மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இவர் அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள வெறுப்பால் ஓமியோபதி மருத்துவத்தைக் கண்டறிந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Haehl, Richard (1922). Samuel Hahnemann his Life and Works. Vol. 1. p. 9.
Hahnemann, was born on 10 April at approximately twelve o'clock midnight.