சாம் விடுதலை அமைப்பு

சாம் விடுதலை அமைப்பு அல்லது ஹைஅத் தஹ்ரீர் அஷ்-ஷாம், சுருக்கமாக:HTS[4]}} என்பது சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சன்னி இசுலாமிய[5][6] அரசியல், துணை இராணுவ அமைப்பாகும். இது 'லெவாண்ட் விடுதலைக்கான அமைப்பு' அல்லது லெவண்ட் விடுதலைக் குழு'[7] எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இது 2017 சனவரி 28 அன்று பல ஆயுதப் பிரிவுகளான ஜெய்ஷ் அல்-அகுரார், அல் நுஸ்ரா முன்னணி, அன்சார் அல்-தின் முன்னணி, ஜெய்ஷ் அல்-சுன்னா, லிவா அல்-கக், நூர் அல்-தின் அல்-ஜென்கி இயக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பாக உருவாக்கப்பட்டது.[8][9] அஹ்ரார் அல்-சாமின் இரண்டாவது அமீராக இருந்த ஒரு இசுலாமியப் போராளி தளபதி அபு முகமது அல்-சுலானி என்பவரின் முன்முயற்சியின் கீழ் இந்த ஒருங்கிணைப்பு செயல்முறை நடைபெற்றது.[8]

சாம் விடுதலை அமைப்பு
ஹைஅத் தஹ்ரீர் அல்-ஷாம்
தலைவர்(கள்)அபு முகமது அல்-சுலானி
செயல்பாட்டுக் காலம்28 சனவரி 2017 – தற்போது வரை
செயல்பாட்டுப் பகுதி(கள்)சிரியா
லெபனான் (ஆகஸ்டு 2017 வரை)
சித்தாந்தம்இசுலாமியவாதம்[1][2]
நிலைசெயல்பாட்டில்
அளவு~31,000 (2017)[3]
தலைமையகம்இட்லிப், சிரியா
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
தஹ்ரீர் அல்-சாம்
எதிரிகள்சிரியா (2024), ஈரான், உருசியா, லெபனான்
யுத்தங்கள் மற்றும் போர்கள்சிரிய உள்நாட்டுப் போர்

இந்த அமைப்பு 2015ஆம் ஆண்டில் இட்லிப் நகரத்தைக் கைப்பற்றி, அதனை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பிற்கு துருக்கி உள்ளிட்ட சன்னி இசுலாம் நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்குகிறது. இந்த அமைப்பிற்கு எதிராக சியா இசுலாம் நாடுகளான இரான், லெபனான் மற்றும் உருசியா உள்ளது.

சிரிய உள்நாட்டுப் போர்

தொகு

2017ஆம் ஆண்டிற்குப் பிறகு அமைதியாக இருந்த இந்த அமைப்பினர், நவம்பர் 2024 முதல் சிரியாவின் பகுதிகளைக் கைப்பற்றத் துவங்கியது. முதலில் 1 டிசம்பர் 2024ல் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியது.[10]பிறகு மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை கைப்பற்றினர்[11]7 டிசம்பர் 2024 அன்று தலைநகர் டமாஸ்கசிற்கு தெற்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாரா நகரத்தை[12]சாம் விடுதலை அமைப்பினர் கைப்பற்றினர்[13]இப்படையினர் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கிச் சென்ற போது, சிரிய ஆட்சியாளர் பசார் அல்-அசத் நாட்டை விட்டு வெளியேறி, உருசியாவில் அடைக்கலம் அடைந்தார்.[14]அத்துடன் சாம் விடுதலை அமைப்பினரின் உள்நாட்டுப் போர் நின்றது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Grant-Brook, William. "Documenting life amidst the Syrian war: Hay’at Tahrir al-Sham’s performance of statehood through identity documents". Citizenship Studies 27 (7): 855, 856. https://doi.org/10.1080/13621025.2024.2321718. 
  2. Drevon, Haenni; Jerome, Patrick (2021). How Global Jihad Relocalises and Where it Leads: The Case of HTS, the Former AQ Franchise in Syria. San Domenico di Fiesole (FI), Italy: European University Institute: European University Institute. pp. i, 8, 28–29. பன்னாட்டுத் தர தொடர் எண் 1028-3625.
  3. Rida, Nazeer (30 சனவரி 2017). "Syria: Surfacing of 'Hai'at Tahrir al-Sham' Threatens Truce". Asharq Al-Awsat. Archived from the original on 15 பெப்பிரவரி 2017.
  4. BBC Monitoring (12 February 2017). "Tahrir al-Sham: Al-Qaeda's latest incarnation in Syria". BBC News இம் மூலத்தில் இருந்து 25 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180925200450/https://www.bbc.com/news/world-middle-east-38934206. 
  5. Drevon, Haenni; Jerome, Patrick (2021). "Abstract". How Global Jihad Relocalises and Where it Leads: The Case of HTS, the Former AQ Franchise in Syria (PDF). San Domenico di Fiesole (FI), Italy: European University Institute. pp. v. பன்னாட்டுத் தர தொடர் எண் 1028-3625. Archived (PDF) from the original on 29 January 2023. பார்க்கப்பட்ட நாள் 16 January 2023.
  6. Y. Zelin, Aaron (2022). "2: The Development of Political Jihadism". The Age of Political Jihadism: A Study of Hayat Tahrir al-Sham. Washington DC, USA: The Washington Institute for Near East Policy. pp. 7–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8-9854474-4-6.
  7. Mroue, Bassem (14 February 2017). "Clashes between 2 extremist groups kill scores in Syria". Associated Press (Beirut) இம் மூலத்தில் இருந்து 9 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200309231239/http://newsok.com/clashes-between-2-extremist-groups-kill-scores-in-syria/article/feed/1167334. 
  8. 8.0 8.1 Joscelyn, Thomas (28 January 2017). "Al Qaeda and allies announce 'new entity' in Syria". Long War Journal. Foundation for Defense of Democracies. Archived from the original on 29 May 2017. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
  9. Mona Alami (6 December 2017). "Syria's Largest Militant Alliance Steps Further Away From Al-Qaeda". Syria Deply. Archived from the original on 15 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
  10. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழு
  11. Homs
  12. Daraa
  13. Syria government loses control of key city Daraa in a blow to Assad
  14. Syria’s Bashar al-Assad is in Russia, confirms Putin’s deputy foreign minister
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_விடுதலை_அமைப்பு&oldid=4166321" இலிருந்து மீள்விக்கப்பட்டது