சாய்சதுரத்திண்மம்

வடிவவியலில் சாய்சதுரத்திண்மம் (rhombohedron) என்பது ஆறு முகங்கள் கொண்டஒரு குவிவு திண்ம வடிவாகும். இது ஒரு சிறப்புவகை இணைகரத்திண்மம். இதன் ஆறு முகங்களும் சாய்சதுர வடிவில் அமைந்திருக்கும். பொதுவாக ஒரு சாய்சதுரத்திண்மத்தில் எதிரெதிர் சோடி முகங்கள் சர்வசம சாய்சதுரங்களாக அமையும்.

சாய்சதுரத்திண்மம்
சாய்சதுரத்திண்மம்
சாய்சதுரத்திண்மம்
வகை பட்டகம்
முகங்கள் 6 சாய்சதுரங்கள்
விளிம்புகள் 12
உச்சிகள் 8
சமச்சீர்குலம் Ci, [2+,2+], (1x)
பண்புகள் குவிவு, zonohedron

ஆறு சாய்சதுரமுகங்களில் உள்ள அனைத்து விரிகோணமற்ற கோணங்களும் சமமாகக் கொண்ட சாய்சதுரத்திண்மமானது மூன்றுகோண பட்டமுகத்திண்மம் (trigonal trapezohedron) என அழைக்கப்படும். அதாவது இந்த மூன்றுகோண பட்டமுகத்திண்மத்தில் ஆறுமுகங்களும் சர்வசம சாய்சதுரங்களாக அமைகின்றன. கனசதுரம், மூன்றுகோண பட்டமுகத்திண்மங்களில் ஒரு சிறப்புவகை.

மூன்றுகோண பட்டமுகத்திண்மம்
Trigonal trapezohedron
Trigonal trapezohedron

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்சதுரத்திண்மம்&oldid=2965678" இலிருந்து மீள்விக்கப்பட்டது