சாரா அமீத் அகமது

சாரா அமீத் அகமது (Saarah Hameed Ahmed)(பிறப்பு: ஏப்ரல் 22, 1989) என்பவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இந்திய வானோடி ஆவார். இவர் மார்ச்சு 2015 அன்று ஸ்பைஸ் ஜெட்டில் பணிபுரிந்தார்.[1] ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, மார்ச் 2015-ல் வானூர்தி போக்குவரத்துத் துறையில் அறியப்பட்ட ஒரே பெண் முஸ்லீம் வானோடி சாரா ஆவார்.[1] தி இந்து இவரைக் கர்நாடகாவின் முதல் முஸ்லீம் பெண் விமானி என்று பட்டியலிட்டுள்ளது.[2]

சாரா அமீத் அகமது
Saarah Hameed Ahmed
பிறப்பு(1989-04-22)22 ஏப்ரல் 1989
பெங்களூர்
தேசியம்இந்தியர்
பணிவானோடி

சாரா பின்னர், தான் முதல் இந்திய முஸ்லீம் பெண் வானோடி என்று ஒருபோதும் கூறவில்லை என்றும், ஒரு சில முஸ்லீம் பெண் விமானிகளில் ஒருவர் என்றும் தெளிவுபடுத்தினார். இஸ்லாமோஃபோபியா பற்றியோ அல்லது மோசமாக நடத்தப்பட்டதைப் பற்றியோ தான் எதையும் குறிப்பிடவில்லை என்றும் சாரா மேலும் தெளிவுபடுத்தினார்.[3]

பின்னணி

தொகு

சாரா சபா அமீத் அகமது கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஜோதி நிவாசு கல்லூரியில் பல்கலைக்கழக முந்தைய படிப்பினை முடித்த பிறகு, அகமது 2007-ல் புளோரிடாவின் வெரோ பீச்சில் உள்ள பாரிஸ் ஏர் விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.[4] இஸ்லாமிய வெறுப்பு மனநிலை 9/11 காலகட்டத்திற்குப் பிறகு, பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களுக்கு அமெரிக்க நுழைவுச்சீட்டு மறுக்கப்படுவதாக இவர் கூறுகிறார். இதனால் தனக்கு நுழைவுச்சீட்டு பெறுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது.

அகமதுவின் தந்தையின் கூற்றுப்படி, சாரா பாரம்பரிய சமூகத்தில் வளர்க்கப்பட்ட பெண் ஆவார், ஒரு பெண்ணின் பொறுப்பான தன் வீடு மற்றும் குழந்தைகளின் மீதும் உள்ளது. ஒரு சிலரே துணைவர் இல்லாமல் வெளி வேலைகளைத் தேடுகிறார்கள் என்பதாகும்.[1] அகமது சமூகத்தில் ஆரம்பத்தில் ஆதரவைப் பெறவில்லை. இவரது குடும்பத்தினர் இவரை ஊக்கப்படுத்த முயன்றனர். ஆனால் இவர் வற்புறுத்தியபோது அவர்கள் மனந்திரும்பினார்கள். சவுத்வெஸ்ட் விமானச்சேவையில் வானோடியாக இருக்கும் இவரது தந்தையின் நண்பர் உறுதியளித்தார்.[1] ஒரு வருட ஆய்வு மற்றும் 200 விமான நேரங்களைப் பதிவு செய்த பிறகு, அகமது,[4] இந்தியாவுக்குத் திரும்பி, தனது உரிமத்தை இந்தியச் சான்றிதழாக மாற்றுவதற்கான செயல்முறையை மேற்கொண்டார். இதற்குக் காத்திருக்கும் காலம் மற்றும் குறிப்பிட்ட வணிக விமான வகைகளைப் பற்றி அறிய லித்துவேனியாவில் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது.[4] "ஆண் ஏகபோகம் உடைக்கப்பட்டுள்ளது, ஆனால் எண்ணிக்கையில் சமநிலை இன்னும் சிறிது நேரம் எடுக்கும்" என்று வணிக விமானத் துறையைப் பற்றியும் இவர் கூறினார்.[5]

தொழில்

தொகு

வணிக நிர்வாகத்தில் இளங்கலை மற்றும் 1200 பறக்கும் நேரம் முடித்த பிறகு, இவர் 2010-ல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் வணிக விமானியாக நியமிக்கப்பட்டார்.[6] விமானப் போக்குவரத்துத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம் பெண்மணியான இவர், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் 600 பெண்களில், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஒரே பெண் முஸ்லீம் விமானியாக இருந்தார்.[7] இவரது சாதனை இவரது சமூகத்தில் ஊக்கமளிக்கிறது, மற்ற முஸ்லீம் பெண்களை வானோடி பயிற்சியில் சேர ஊக்குவிக்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Mondal, Sudipto (9 March 2015). "India's only woman Muslim pilot has a message to share". Hindustan Times (Bengaluru, India). http://www.hindustantimes.com/india/india-s-only-woman-muslim-pilot-has-a-message-to-share/story-iiUTPOrYQxhrs0Mrx1LtUK.html. பார்த்த நாள்: 24 September 2015. 
  2. Deepika, K.C. (8 March 2015). "A Flight Away from Religious Stereotypes". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/a-flight-away-from-religious-stereotypes/article6971659.ece. 
  3. "Indian female Muslim pilot clarifies". The Siasat Daily. 27 November 2015.
  4. 4.0 4.1 4.2 Siraj, M A (19 October 2013). "She flies high with her wings of passion". Deccan Herald (Bengaluru, India). http://www.deccanherald.com/content/363808/she-flies-high-her-wings.html. பார்த்த நாள்: 24 September 2015. 
  5. "Women Leaders of the Skies". The Fiji Times. 15 August 2016. http://www.fijitimes.com/story.aspx?id=366948. 
  6. Abraham, Bobins (23 November 2015). "India's First Muslim Woman Pilot Says She Faces A Lot of Islamophobia". India Times. http://www.indiatimes.com/news/india/india-s-first-muslim-woman-pilot-says-she-faces-a-lot-of-islamophobia-247637.html. 
  7. Siraj, Maqbool Ahmed (15 November 2013). "Saara Hameed – India's First Muslim Woman Pilot". Islamic Voice இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225145141/http://islamicvoice.com/saara-hameed-indias-first-muslim-woman-pilot/. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_அமீத்_அகமது&oldid=4056547" இலிருந்து மீள்விக்கப்பட்டது