சார்லசு எட்வர்டு ஆடம்சு

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நில அளவர், வானியலாளர் மற்றும் நில அதிர்வு நிபுணர்

சார்லசு எட்வர்டு ஆடம்சு (Charles Edward Adams) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆவார். 1870 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளான்று எட்வர்டு ஆடம்சு நியூசிலாந்து நாட்டிலுள்ள ஒடாகா பகுதியிலுள்ள இலாரன்சு என்ற சிறுநகரத்தில் பிறந்தார். நில அளவர், வானியலாளர் மற்றும் நில அதிர்வு நிபுணர் என பன்முகங்களுடன் இயங்கினார். இவரது தந்தை, சார்லசு வில்லியம் ஆடம்சு 1862 ஆம் ஆண்டில் தாசுமேனியாவிலிருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். இவரும் நில அளவராகவும் வானியலாளராகவும் செயல்பட்டுள்ளார். கேண்டர்பரி பல்கலைக்கழகத்தில் சார்லசு எட்வர்டு ஆடம்சு கல்வி பயின்றார். இங்கு அறிவியல் மற்றும் கட்டடப் பொறியியல் பாடங்களைப் பயின்றார். பின்னர் லிங்கன் பல்கலைக்கழகத்திலும் வெலிங்டன் நகரிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்பித்தார்.[1] அதன் பின்னர் ஓர் அரசாங்க வானியலாளராக பதவியேற்றார்.[2] சார்லசு ஆடம்சு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 அன்று வெலிங்டனில் இறந்தார்

மேற்கோள்கள்தொகு

  1. "[one] — the college is founded | NZETC".
  2. Smith, Warwick D. "Charles Edward Adams". Dictionary of New Zealand Biography. Ministry for Culture and Heritage. 23 April 2017 அன்று பார்க்கப்பட்டது.