சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் (Paris Charles de Gaulle Airport, பிரெஞ்சு மொழி: Aéroport Paris-Charles de Gaulle, ஐஏடிஏ: CDGஐசிஏஓ: LFPG), மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் (அல்லது பிரான்சியத்தில் சுருக்கமாக ருவாய்சி) என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் கட்டற்ற பிரெஞ்சுப் படையின் தலைவருமான சார்லஸ் டி கோல் (1890–1970) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாரிசின் வடகிழக்கே 25 km (16 mi)[2] தொலைவில் அமைந்துள்ளது. ஏர் பிரான்சின் முதன்மை முனைய நடுவமாக சேவையாற்றுகிறது.

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

Aéroport Paris-Charles-de-Gaulle

ருவாய்சி வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்பாரிசின் வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
சேவை புரிவதுபாரிஸ், பிரான்சு
அமைவிடம்பாரிசின் வடகிழக்கில் 25 km (16 mi)
மையம்
கவனம் செலுத்தும் நகரம்
  • ஏர் மெடிட்டரேன்
  • ஈசிஜெட்
  • ஐரோப்பா ஏர்போஸ்ட்
உயரம் AMSL392 ft / 119 m
இணையத்தளம்www.aeroportsdeparis.fr
நிலப்படம்
பிரான்சில் இல் ட பிரான்சு வட்டாரப் பகுதியின் அமைவிடம்
பிரான்சில் இல் ட பிரான்சு வட்டாரப் பகுதியின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08L/26R 4,215 13,829 அசுபால்ட்டு
08R/26L 2,700 8,858 பைஞ்சுதை
09L/27R 2,700 8,858 அசுபால்ட்டு
09R/27L 4,200 13,780 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள்76,150,007
வானூர்தி இயக்கங்கள்498,175
சரக்கு (மெட்ரிக் டன்)2,156,327
மூலங்கள்: பிரான்சின் வான்வழித் தரவுகள் வெளியீடு,[2] வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு[3][4]

2012இல் இந்த நிலையம் 61,556,202 பயணிகளையும் 497,763 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது.[5] உலகின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில் உலகின் பத்தாவதாகவும் ஐரோப்பாவில் முதலாவதாகவும் விளங்குகிறது. 2011இல் சரக்கு போக்குவரத்தில் 2,087,952 மெட்றிக் டன்களை கையாண்ட இந்த நிலையம் உலகளவில் ஐந்தாவதாகவும் ஐரோப்பாவில் பிராங்க்புர்ட் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]

மேற்சான்றுகோள்கள்

தொகு
  1. "Delta Air Lines Newsroom – Press Kit". News.delta.com. 7 January 2010. பார்க்கப்பட்ட நாள் 28 January 2011.
  2. 2.0 2.1 வார்ப்புரு:AIP FR
  3. Traffic Movements 2010 Final பரணிடப்பட்டது 2012-08-08 at the வந்தவழி இயந்திரம் வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவிடமிருந்து
  4. Passenger Traffic 2010 Final பரணிடப்பட்டது 2012-05-12 at the வந்தவழி இயந்திரம் [[வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு]விடமிருந்து]
  5. 5.0 5.1 "Statistiques annuelles". Union des aéroports Français. Archived from the original on 29 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 24 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
பொது
2ஈ முனையம் உருக்குலைந்தது குறித்து