சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு (Charlie Hebdo shooting) என்பது 07 சனவரி 2015 அன்று ஒ.ப.நே 10:30 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிகழ்வாகும். முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[12][13] கட்டிடத்தினுள் நுழைந்ததும் தானியங்கி ஆயுதங்களின் மூலம் ஆயுததாரிகள் சுட்டனர். 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[14] பிரான்சு நாட்டில் 18 ஜூன் 1961 அன்று 28 பேர் கொல்லப்பட்ட தொடர்வண்டிக் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.[14][15][16]

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு
தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பத்திரிக்கையாளர்கள், காவல்த் துறையினர் மற்றும் அவசர உதவி வாகனங்கள் சம்பவ இடத்தில் கூடின.
இடம்'பிரான்சு, பாரிஸ்
ஆள்கூறுகள்48°51′33″N 2°22′13″E / 48.859246°N 2.370258°E / 48.859246; 2.370258
நாள்7 சனவரி 2015 (2015-01-07) 11:30 CET –9 சனவரி 2015 (2015-01-09) 18:35 CET (UTC+01:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
சார்லி ஹெப்டோ ஊழியர்கள்
மொன்ட்ரொக் தாக்குதல்: காவல்த்துறை அதிகாரி
ஹைபெர்கேஷ் முற்றுகை: யூத சிறப்பு அங்காடி நுகர்வோர்
தாக்குதல்
வகை
தீவிரவாதம்
ஆயுதம்ஏகே-47[1]
shotgun[2]
எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு[3][4][5][6]
இறப்பு(கள்)மொத்தமாக இருபது பேர்:
  • 8 ஊழியர்கள், 2 காவலர்கள் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் "சார்லி ஹெப்டோவில்" பண்ணிரெண்டு பேர் கொல்லப்பட்டனர்
  • மொன்ட்ரொக் தாக்குதலில் ஒரு காவல்த்துறை அதிகாரி
  • டம்மர்டின்-என்-கோயலே முற்றுகையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்ட இருவர்
  • 5 at Porte de Vincennes siege (4 hostages and 1 suspect)
காயமடைந்தோர்14
  • 11 employees and police officers at Charlie Hebdo shooting
  • 1 bystander at Montrouge shooting
  • At least 2 police officers at Porte de Vincennes siege
தாக்கியோர்
தாக்கியோர்Saïd Kouachi, Chérif Kouachi[10][11]

பின்புலம்

தொகு

சார்லி ஹெப்டோ, பிரான்சு நாட்டிலிருந்து வெளியாகும் ஒரு வாராந்த இடதுசாரிப் பத்திரிகை ஆகும். இது கேலிச்சித்திரங்கள், அறிக்கைகள், நகைச்சுவைகள் மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஆகும். 2011 ஆம் ஆண்டு இஸ்லாமிய இறைத்தூதர் முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இந்நிகழ்விற்காக, இப்பத்திரிகையின் பழைய அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல் செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டது. மேலும் இதன் இணையத்தளமும் விசமிகளால் முடக்கப்பட்டது.

தாக்குதல்

தொகு

07 ஜனவரி 2015 அன்று ஒ.ப.நே 10 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகையின் தலைமையகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.[12][13] இறந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள். கட்டிடத்தினுள் நுழைந்ததும் தானியங்கி ஆயுதங்களின் மூலம் ஆயுததாரிகள் சுட்டனர். 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[14] துப்பாக்கிச் சூடு நடத்தும் போது பதிவான காணொளியில் தீவிரவாதிகள் அல்லாஹூ அக்பர்[17] எனக் குரலெழுப்பினர். மேலும் நாங்கள் முகம்மது நபிக்காக பழிவாங்குகிறோம், அதனால்தான் கொன்றோம் எனவும் குரலெழுப்பினர்.[17][18][19][20] இந்தத் துப்பாக்கிச் சூடு முதலில் கட்டிடத்தின் நுழைவாயிலில் ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலும் நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டின் போது அலுவலகத்தில் ஊழியர்கள் கலந்துரையாடலில் இருந்தனர். மொத்த துப்பாகிச் சூடு நிகழ்வும் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் முடிவுற்றது. சில சாட்சிகளின் கூற்றுப்படி துப்பாக்கி ஏந்திய ஆயுததாரி சுடும் போது ஊழியர்கள் பெயரைச் சொல்லி அழைக்கப்பட்டிருக்கின்றனர்.[21] இந்தத் ஆயுததாரிகள் ஏமன் நாட்டினைச் சேர்ந்த அல் காயிதா தீவிரவாதிகள் எனத் தெரிகிறது.[8]

அல் காயிதா பொறுப்பேற்றது

தொகு

சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல் காயிதா அமைப்பின் ஏமன் நாட்டுக் கிளை பொறுப்பேற்றுள்ளது. அல்கய்தா ஏமன் கிளையின் முக்கிய தளபதியான நாசர் அல் அன்சாய் இறைதூதரை இழிவுபடுத்தியதற்கு பழிக்குப்பழியாக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என காணொளி மூலம் இத்தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், பிரான்சில் தாக்குதல் நடத்த அல்கய்தாவின் ஏமன் கிளை திட்டமிட்டதாகவும் தாக்குதலுக்கு திட்டம் வகுத்து நிதி உதவியை ஏமன் நாட்டு அல்கய்தா வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.[22]

தாக்குதலுக்குப் பின்னான நிகழ்வுகள்

தொகு

தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் மூவரும் காத்திருந்த நான்காவது தீவிரவாதியின் வாகனத்தில் போர்ட் டி பான்டின் (Porte de Pantin) பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து மற்றொரு வாகனத்தின் ஓட்டுனரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவ்வாகனத்தைக் கடத்தித் தப்பிச் சென்றனர். தடுத்த காவல் அதிகாரிகளையும் சுட்டனர்.[23] காயமுற்ற காவலரை அணுகிய தீவிரவாதி, நீ என்னைக் கொல்ல வேண்டுமா? எனக் கேட்டிருக்கிறார், காவலர் இல்லை, பரவாயில்லை எனப் பதிலளித்த பின்னர் அக்காவலர் தீவிரவாதியால் தலையில் சுடப்பட்டார்.[24]

பாதிக்கப்பட்டோர் விவரம்

தொகு

கொல்லப்பட்டவர்கள் [25]

தொகு
  • மெராபெத் அஹ்மத் (Merabet Ahmed) 42 வயது காவல்துறை அதிகாரி..[21][26][27]
  • ஃப்ரெடரிக் போஸ்ஸியூ (Boisseau) 42 வயது கட்டிடப் பராமரிப்பு ஊழையர்.
  • ஃப்ராங்க் பிரின்ஸோலரோவ் (Franck Brinsolaro) 49 வயது காவல்துறை அதிகாரி.[28]
  • கேபு (Cabu) 76 வயது கேலிச்சித்திரக்காரர்.
  • எல்ஸா கேயாத் (Elsa Cayat) கட்டுரையாசிரியர்.
  • சேர்ப் (Charb) 47 வயது தலமைக் கேலிச்சித்திரக்காரர்.
  • பிலிப்பி ஹோனோர் (Philippe Honoré) 74 வயது கேலிச்சித்திரக்காரர்.
  • பெர்னார்டு மாரிஸ் (Bernard Maris) 68 வயது பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் கட்டுரையாளர்.[29][30]
  • மெளஸ்தபா ஒளராடு (Moustapha Ourad) , பிழைதிருத்துபவர்.
  • மைக்கேல் ரினெளவ்ட் (Michel Renaud) சிறப்புக் கட்டுரையாளர்.
  • திக்னெளஸ் (Tignous) 57 வயது கேலிச்சித்திரக்காரர்.
  • ஜியார்ஜஸ் வோலின்ஸ்கி (Georges Wolinski) 80 வயது கேலிச்சித்திரக்காரர்.[31]

காயப்படுத்தப்பட்டவர்கள்

தொகு
  • பிலிப்பி லான்கான் (Philippe Lancon) பத்திரிகையாளர், முகத்தில் சுடப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளார்.
  • ஃபேப்ரைஸ் நிக்கோலினோ (Fabrice Nicolino) பத்திரிகையாளர், காலில் சுடப்பட்டார்.
  • லெளரண்ட் "ரிஸ்" செளரிஸ்ஸெயேயு (Laurent "Riss" Sourisseau0 கேலிச்சித்திரக்காரர்.

மேலும் அடையாளம் காணப்படாத காவல்துறை அதிகாரிகள்.[32][33][34]

பாதிக்கப்படாதவர்கள்

தொகு
  • கேலிச்சித்திரக்காரர் வில்லியம் (Willem).[35]
  • கேத்தரின் மெரூய்ஸி (Catherine Meurisse)[36]
  • ரெனால்ட் "லஸ்" லுஸியர் (Renald "Luz" Luzier)[37]
  • கோரினி "கோகோ" ரே (Corinne "Coco" Ray)[38]
  • ரியாத் சாட்டெளப் (Riad Sattouf)[39]
  • காமாகுர்கா (Kamagurka)[40]
  • பத்திரிகையாளர் ஜெரார்டு பயார்டு (Gerard Biard).[41]
  • லெலரண்ட் லெகர் (Laurent Leger)[42]
  • ஜெரார்டு கேலியார்டு (Gerard Gaillard)[43]
  • அன்டோனியோ ஃபிஸ்செட்டி (Antonio Fischetti)[44]
  • பேட்ரிக் பெல்லெளக்ஸ் (Patrick Pelloux)[45]

எதிர்ப்புப் பேரணி

தொகு

இத்தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகப் பொதுமக்கள் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்திவருகின்றனர்.[46][47][48]

சந்தேகத்திற்குரிய நபர்கள்

தொகு
 
வாசலருகே தவறவிடப்பட்ட அடையாள அட்டையிலுள்ள சையது கோவ்சியின் புகைப்படம்
  • சையது கோவ்சி (Saïd Kouachi, 07 செப்டம்பர், 1980) மற்றும் ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi, 29 நவம்பர், 1982) ஆகியோர் முகமூடி அணிந்து துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய நபர்கள் என பிரான்சு காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[49][50] இவருவம் சகோதரர்கள் மேலும் பிரான்சு நாட்டின் குடியுரிமை பெற்ற பிராங்கோ-அல்ஜீரியன் (Franco-Algerian) இஸ்லாமியர்கள் ஆவர்.[49][51][52][53] இவரது பெற்றோர் அல்ஜீரியாவிலிருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள்.[54] சகோதரர்கள் இருவரும் சிறுவயதில் தனியாக வாழ்ந்தவர்கள்.[52] ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi) ஏற்கனவே ஈராக் வழியாக சிரியா செல்லும் போது 2005 ஜனவரி அன்று கைது செய்யப்பட்டார். இவர் பாரிஸ் நகரிலுள்ள அட்டவா ( Addawa) மசூதிதியைச் சார்ந்த தீவிரப் பேச்சாள பரீத் பென்யெடெள (Farid Benyettou)- வின் மாணவர் ஆவார். இவரிடம் ஏற்கனவே ஈராக்கில் ஜிகாத் செய்யமுடியாவிட்டால் பிரான்ஸின் யூதர் வசிக்குமிடங்களைத் தாக்கும்படி பரீத் பென்யெடெள (Farid Benyettou) சொல்லியிருந்தார்.[55] 2008 ஆம் ஆண்டு ஷெரீஃப் கோவ்சி (Chérif Kouachi)- க்கு, ஈராக்கின் அபு முஸாப் அல்-ஸார்க்வி எனும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவிற்கு ஆட்கள் அனுப்பிய குற்றச் செயல்களுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.[56]
  • மூன்றாவது சந்தேக நபராக வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எந்த நாட்டைச் சார்ந்தவர் என உறுதிப்படுத்தப்படாத வேலையிலாத இஸ்லாமிய இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்மீது துப்பாக்கிச் சூட்டின் போது வாகனம் ஓட்டியதாக சந்தேகப்படுகிறனர்.[49][57][58][59] ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்த போது இவர் வகுப்பறையில் இருந்ததாகவும்[60], எனவே உடன் படிக்கும் மாணவர்களிடம் இதை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படுகிறது.[61] இவர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.[62]

சந்தேகத்திற்குரிய நபர்கள் சுட்டுக் கொலை

தொகு

வடக்கு பாரிஸ் பகுதியில் பதுங்கியிருந்த சகோதரர்களான சையது கோவ்சி மற்றும் ஷெரீஃப் கோவ்சி இருவரும் பிரான்சு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் தொழிற்சாலைப் பகுதிகளில் பதுங்கியிருந்தபோது காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர். காவலர்களின் பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.[63] இவர்களுடன் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி கிழக்கு பாரீஸ் நகரின் வணிக அங்காடி ஒன்றில் பிணையக்கைதிகளுடன் பதுங்கியிருந்தான். சையது கோவ்சி மற்றும் ஷெரீஃப் கோவ்சி சகோதரர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை காவல்துறையியினர் கைவிட வேண்டும் என்று அந்தத் தீவிரவாதி மிரட்டியிருந்தான்.[64] பின்னர், தீவிரவாத எதிர்ப்புக் காவலர் பிரிவின் நடவடிக்கையில் அவன் கொல்லப்பட்டான். பிணையக்கைதிகளில் நால்வர் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர், மேலும் நால்வர் காயமடைந்தனர் மற்றும் பதினைந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காவலர்களில் இருவர் காயமடைந்தனர்.[63]

அல் காயிதா மிரட்டல்

தொகு

பிரான்சில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அல் காயிதா எச்சரித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் ஏமனில் கல்வி பயின்றதாகவும் அங்கு அல் காய்தா பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதாகவும் ஏமன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அரேபியன் தீபகற்பத்தில் உள்ள அல் காய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஷேக் ஹாரித் அல்-நதாரி (Sheikh Harith al-Nadhari), பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஜெவிஸ் பல்பொருள் விற்பனை அங்காடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் பிரான்சில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.[65] முஸ்லீம்கள் மீது ஆக்ரோஷம் காட்டுவதை குறைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. இதனால் நீங்கள் பாதுகாப்பாக வாழ முடியும். நீங்கள் ஏற்க மறுத்தால் போர் தொடுக்கப்படும் என மிரட்டலில் தெரிவித்துள்ளன.[66] தீவிரவாதி ஷெரீஃப் கோவ்சி இத்தாக்குதலுக்கு அல் காயிதா நிதி உதவி வழங்கியதாக கொல்லப்படுவதற்கு முன்னர் தெரிவித்தான்.[65]

சம்பவ இடங்களின் வரைபடம்

தொகு
 
 
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம்
 
பிணையக்கைதிகளைப் பிடித்துவைத்திருந்த அங்காடி
 
சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நடந்த இடம்
பாரிஸில் தாக்குதல் நடந்த இடங்கள்.

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Helene Fouquet (7 January 2015). "Paris Killings Show Rise of Banned French 'Weapons of War'". Bloomberg.
  2. "Charlie Hebdo shooting: At least 12 killed as shots fired at satirical magazine's Paris office". 7 January 2015. http://www.independent.co.uk/news/world/europe/charlie-hebdo-shooting-10-killed-as-shots-fired-at-satirical-magazine-headquarters-according-to-reports-9962337.html. பார்த்த நாள்: 9 January 2015. 
  3. "Paris Charlie Hebdo attack: live". The Daily Telegraph. 7 January 2015.
  4. "12 dead in 'terrorist' attack at Paris paper". Yahoo News. 7 January 2015.
  5. Ben Doherty. "Tony Abbott condemns 'barbaric' Charlie Hebdo attack in Paris". The Guardian.
  6. Mejia, Paula (7 January 2015). "Four Victims of Charlie Hebdo Attack Identified". Newsweek. http://www.newsweek.com/four-victims-charlie-hebdo-attack-identified-297255. பார்த்த நாள்: 8 January 2015. 
  7. "Charlie Hebdo Paris shooting: Al-Qaeda hit list named cartoonist Stephane Charbonnier". 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. 8.0 8.1 "Terrorists shouted they were from Al Qaeda in the Yemen before Charlie Hebdo attack". த டெயிலி டெலிகிராப். 7 January 2015. Archived from the original on 7 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Charlie Hebdo attack: the Kouachi brothers and the network of French Islamists with links to Islamic State". 8 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  10. 10.0 10.1 "Yemen branch of al-Qaeda claim they directed attack on office of Charlie Hebdo as kosher grocery store killer said he was fighting for the Islamic State and wanted to kill Jews". 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  11. "'I am a defender of the prophet… journalists are not civilians, but targets': Chilling boast of terrorists responsible for Charlie Hebdo massacre and carnage in kosher grocery". 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  12. 12.0 12.1 "Gun attack on French magazine Charlie Hebdo kills 11". BBC News. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  13. 13.0 13.1 "Charlie Hebdo attack: 12 dead in Paris, manhunt on". CNN. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  14. 14.0 14.1 14.2 "Charlie Hebdo attack – latest". BBC News. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  15. "12 dead in Paris newspaper attack: prosecutors". MSN News. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  16. "Paris on Terrorism Alert After 11 Killed in Magazine Attack". Bloomberg. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  17. 17.0 17.1 "L'essentiel Online – Les deux hommes criaient «Allah akbar» en tirant – News". L'essentiel Online.
  18. "En direct : Des coups de feu au siège de Charlie Hebdo" (in French). see comments at 13h09 and 13h47: "LeMonde.fr: @Antoine Tout ce que nous savons est qu'ils parlent un français sans accent." and "LeMonde.fr: Sur la même vidéo, on peut entendre les agresseurs. D'après ce qu'on peut percevoir, les hommes semblent parler français sans accent."{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  19. "Deadly attack on office of French magazine Charlie Hebdo". BBC News. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  20. http://www.rtl.fr/actu/societe-faits-divers/video-on-a-tue-charlie-hebdo-crient-les-suspects-de-la-fusillade-7776129408
  21. 21.0 21.1 "Paris shooting: Manhunt after gunmen attack office of Charlie Hebdo, French satirical magazine". 7 January 2015.
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-15.
  23. "12 dead in 'terrorist' attack at Paris paper". யாகூ! செய்திகள். பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  24. S.L (7 January 2015). "Attentat à Charlie Hebdo : le scénario de la tuerie". MYTF1NEWS. Archived from the original on 11 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  25. http://www.newsweek.com/officer-shot-during-charlie-hebdo-massacre-identified-297603 Retrieved 1 July 2015
  26. "Charlie Hebdo attack: What we know about the three gunmen" இம் மூலத்தில் இருந்து 2015-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150108102736/http://www.news.com.au/world/europe/charlie-hebdo-attack-what-we-know-about-the-three-gunmen/story-fnh81p7g-1227177847039. 
  27. Polly Mosendz. "Police Officer Ahmed Merabet Shot During Charlie Hebdo Massacre". நியூஸ்வீக். http://www.newsweek.com/officer-shot-during-charlie-hebdo-massacre-identified-297603. 
  28. Attentat de Charlie Hebdo, l'un des policiers tués demeurait en Normandie. 7 January 2015 www.tendanceouest.com in French (Google translated)
  29. "EN DIRECT. Massacre chez "Charlie Hebdo" : 12 morts, dont Charb et Cabu". Le Point.fr (in French).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  30. "Les dessinateurs Charb et Cabu seraient morts" (in French). L'Essentiel (France). 7 January 2015. http://www.lessentiel.lu/fr/news/france/story/22976860. பார்த்த நாள்: 7 January 2015. 
  31. "Attentat contre "Charlie Hebdo " : Charb, Cabu, Wolinski et les autres, assassinés dans leur rédaction". Le Monde (in French).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  32. http://translate.googleusercontent.com/translate_c?depth=1&hl=en&prev=search&rurl=translate.google.com&sl=fr&u=http://www.lepoint.fr/societe/en-direct-attentat-de-charlie-hebdo-le-raid-pret-a-donner-l-assaut-a-reims-08-01-2015-1894813_23.php&usg=ALkJrhgXLbHEqT5Z-akbF7UUKSe_HR3qjQ accessed 1/7/15
  33. "EN DIRECT. Attentat à Charlie Hebdo : 12 morts, les terroristes en fuite" (in French). Le Parisien (France: Le Parisien). 7 January 2015. http://www.leparisien.fr/faits-divers/en-direct-paris-fusillade-au-siege-de-charlie-hebdo-07-01-2015-4425881.php. பார்த்த நாள்: 7 January 2015. 
  34. "Charlie Hebdo shootings: 'It's carnage, a bloodbath. Everyone is dead'". தி கார்டியன். 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  35. http://translate.google.com/translate?hl=en&sl=nl&u=http://www.volkskrant.nl/dossier-aanslag-op-charlie-hebdo/nederlandse-charlie-hebdo-cartoonist-we-moeten-doorgaan~a3824860/&prev=search accessed 1/7/2015
  36. http://translate.google.com/translate?hl=en&sl=fr&u=http://www.courrierdelouest.fr/actualite/attaque-de-charlie-hebdo-catherine-meurisse-tres-choquee-07-01-2015-201978&prev=search accessed 1/7/2015
  37. http://www.mirror.co.uk/news/world-news/charlie-hebdo-cartoonist-escaped-slaughter-4935919 accessed 1/7/2015
  38. http://news.yahoo.com/young-mother-let-terrorists-into-charlie-hebdo-building-after-threat-against-daughter-190057740.html accessed 1/7/2015
  39. http://translate.google.com/translate?hl=en&sl=fr&u=http://www.sudouest.fr/2015/01/07/attaque-contre-charlie-hebdo-charb-et-cabu-tues-selon-plusieurs-medias-1788526-4697.php&prev=search accessed 1/7/2015
  40. http://www.demorgen.be/binnenland/kamagurka-dient-wit-blad-in-wat-kun-je-nu-nog-tekenen-a2174273/ accessed 1/7/2015
  41. http://www.nbcnews.com/storyline/paris-magazine-attack/charlie-hebdos-slain-editor-charb-long-defended-provocative-material-n281371 accessed 1/7/2015
  42. http://edition.cnn.com/2015/01/07/world/france-magazine-attack-victims/index.html accessed 1/7/2015
  43. http://www.latimes.com/world/europe/la-fg-charlie-hedbo-attack-live-updates-20150107-htmlstory.html accessed 1/7/2015
  44. http://time.com/3658358/paris-terror-attack-charlie-hebdo-mohamed/ accessed 1/7/2015
  45. http://translate.google.com/translate?hl=en&sl=fr&u=http://www.legeneraliste.fr/actualites/article/2015/01/07/patrick-pelloux-echappe-a-lattentat-de-charlie-hebdo_258476&prev=search accessed 1/7/2015
  46. Fabian Federl (7 January 2015). ""Je suis Charlie": Hitzige Debatten auf Twitter". Tages Spiegel. http://www.tagesspiegel.de/politik/charlie-hebdo-twitter-rundschau-je-suis-charlie-hitzige-debatten-auf-twitter/11196864.html. 
  47. "Charlie Hebdo : 10.000 personnes rassemblées à Toulouse". Le Figaro. http://www.lefigaro.fr/flash-actu/2015/01/07/97001-20150107FILWWW00382--charlie-hebdo-10000-personnes-rassemblees-a-toulouse.php. 
  48. Je suis Charlie! The cry of defiance: Vast crowds rally across the world to condemn the gun massacre as Francoise Hollande declares tomorrow a day of mourning, DailyMail.co.uk, 7 January 2015
  49. 49.0 49.1 49.2 Higgins, Andrew; De La Baume, Maia (8 January 2015). "Two Brothers Suspected in Killings Were Known to French Intelligence Services". nytimes.com. http://www.nytimes.com/2015/01/08/world/two-brothers-suspected-in-killings-were-known-to-french-intelligence-services.html?_r=0. பார்த்த நாள்: 8 January 2015. 
  50. "Who are the Charlie Hebdo gunmen?". Daily Mail. 7 January 2015. http://www.dailymail.co.uk/news/article-2900941/Who-Charlie-Hebdo-gunmen-Islamic-fanatics-claimed-Al-Qaeda-Yemen-shooting-12-dead.html. பார்த்த நாள்: 8 January 2015. 
  51. [1]
  52. 52.0 52.1 "Un commando organisé". liberation.fr. Archived from the original on 21 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  53. "Paris Attack Suspect Dead, Two in Custody, U.S. Officials Say". NBC News. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  54. [2]
  55. cnn.com 8 January 2015
  56. Matthieu Suc. "Attentat à " Charlie Hebdo " : que sait-on des deux suspects recherchés ?". Le Monde.fr.
  57. "Attentat à Charlie Hebdo. Les trois suspects identifiés et traqués". Ouest-France. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  58. Anthony Bond (7 January 2015). "Charlie Hebdo Paris shooting: Three men suspected of killing 12 in terror attack 'holed up near Belgium border'". Mirror. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
  59. "Charlie Hebdo suspect said to surrender; two others at large after Paris terror attack". Washington Post.
  60. Fatal shooting at Charlie Hebdo HQ in Paris LIVE UPDATES RT. 8 January 2015. Retrieved 8 January 2015
  61. ""Charlie Hebdo" : Mourad Hamyd, accusé à tort ?". Le Point.
  62. "La traque d'une fratrie de djihadistes". Le Monde.
  63. 63.0 63.1 http://www.bbc.com/news/world-europe-30752239
  64. http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150109_france_supermarket
  65. 65.0 65.1 http://www.dw.de/al-qaeda-in-yemen-warns-france-of-new-attacks/a-18183050
  66. http://news.vikatan.com/article.php?module=news&aid=37211[தொடர்பிழந்த இணைப்பு]