சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்


சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Salak Selatan Komuter Station; மலாய்: Stesen Komuter Salak Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும்.[1]

 KC03 

சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்
Salak Selatan Komuter Station
பொது தகவல்கள்
அமைவிடம்சாலாக் செலாத்தான், கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°05′54″N 101°42′17″E / 3.09833°N 101.70472°E / 3.09833; 101.70472
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
ரேபிட் ரெயில் (MRT)
தடங்கள் (கேடிஎம் கொமுட்டர்)
 பத்துமலை-புலாவ் செபாங் 
மலாயா மேற்கு கடற்கரை
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KC03 
வரலாறு
திறக்கப்பட்டது KC03  1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையம்   அடுத்த நிலையம்
செபுத்தே நிலையம்
<<<
பத்துமலை நிலையம்
 

பத்துமலை
புலாவ் செபாங் வழித்தடம்
 
பண்டார் தாசேக்
>>>
புலாவ் செபாங் தம்பின்
அமைவிடம்
Map
சாலாக் செலாத்தான்

சாலாக் விரைவுச்சாலை E37 -இன் எதிர்ப்புறமாக, சாலாக் செலாத்தான் நகரில் இருந்து 400 மீட்டர் தெற்கே இந்த நிலையம் அமைந்துள்ளது.

பொது

தொகு

சிரம்பான் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் முதன்மையாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் நான்கு தொடருந்து பாதைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த நிலையத்தில், வடக்கு அல்லது தெற்கு செல்லும் பயணிகளுக்கு இரண்டு நடைபாதைகள் மட்டுமே உள்ளன. இரண்டு வெளிப்புறப் பாதைகளால் நடைபாதைகள் சேவை செய்யப்படுகின்றன.

அதே வேளையில், நிலையத்தில் நடுவில் உள்ள இரண்டு தடங்கள், நிலையத்தில் நிற்காத தொடருந்துகளுக்கான மாற்றுவழி தடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையம் ஒரு சிறிய தொடருந்து ஊழியர் குழுவினரைக் கொண்டு செயல்படுகிறது.[2]

இலகுத் தொடருந்து நிலையம்

தொகு

 SP15  சாலாக் செலாத்தான் இலகுத் தொடருந்து நிலையம், இந்த சாலாக் செலாத்தான் கொமுட்டர் நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில், மிக அருகில் அமைந்துள்ளது.

அடுத்த நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், சாலையின் வழியாகத்தான் பயணிகள் நடந்து செல்ல வேண்டும். இரண்டு நிலையங்களும் மிக அருகில் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Salak Selatan KTM station is a KTM Komuter train station located near the Kuala Lumpur township of Salak South. Facing the Salak Expressway off exit 2704 of the highway, the station is situated south from the old town of Salak South, about 400m apart". klia2 info. 29 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.
  2. "The Salak Selatan KTM Komuter Station is a KTM Komuter train halt forms part of a common KTM Komuter railway line in Seremban Line. The Station was completed and opened to the public on 1995". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு