சால்சேட் தீவு

சால்சேட் தீவு (Salsette Island) மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின், மேற்கு பகுதியான அரபுக் கடலில் அமைந்துள்ளது. மராத்தி மொழியில் சால்சேட் தீவை சாண்டி தீவு என அழைக்கிறார்கள். சால்செட்டித் தீவில் மும்பை மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம் தானே மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் மீரா-பாயந்தர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது.

சால்சேட் தீவு
உள்ளூர் பெயர்: साष्टी
சால்சேட் தீவில் அமைந்த மும்பை மாவட்டம், மும்பை புறநகர் மாவட்டம் மற்றும் தானோ.
புவியியல்
அமைவிடம்அரபுக் கடல்
ஆள்கூறுகள்20°N 72°E / 20°N 72°E / 20; 72
பரப்பளவு619 km2 (239 sq mi)
உயர்ந்த ஏற்றம்467 m (1,532 ft)
உயர்ந்த புள்ளிகங்கேரி, சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா
நிர்வாகம்
India
பெரிய குடியிருப்புமும்பை
மக்கள்
மக்கள்தொகை15,111,974
அடர்த்தி24,414 /km2 (63,232 /sq mi)
இனக்குழுக்கள்மராத்தியர்கள் (53%), குஜராத்திகள் (22%), வட இந்தியவர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்தி மக்கள் (3%), துளு மக்கள்/கன்னடியர்கள் (2%)

619 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சால்சேட் தீவு 1.5 கோடி மக்கள் தொகை கொண்டது. உலகில் மக்கள் தொகை அடர்த்தி மிக்க தீவுகளில் சால்சேட் தீவு முதல் இடத்தில் உள்ளது.

சால்சேட் தீவு முன்னர் போர்த்துகேயர்களின் காலனியாக இருந்தது.

அமைவிடம்

தொகு

சால்சேட் தீவின் வடக்கில் வசாய் கழிமுகமும், வடகிழக்கில் உல்லாஸ் ஆறும், கிழக்கில் தானே கழிமுகமும் மற்றும் மும்பை துறைமுகமும், தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் எல்லையாக கொண்டது.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சால்சேட்டின் ஏழு தீவுகளை ஒருங்கிணைத்து மும்பை மாநகரம் உருவானது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Geography - Salsette group of Islands". Maharashtra State Gazetteer, Greater Bombay district. 1987. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்சேட்_தீவு&oldid=3589687" இலிருந்து மீள்விக்கப்பட்டது