சாவகம் குளக்கொக்கு

சாவகம் குளக்கொக்கு
இனப்பெருக்க கால இறகுகளுடன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆர்டியோலா
இனம்:
ஆ. இசுபெசியோசா
இருசொற் பெயரீடு
ஆர்டியோலா இசுபெசியோசா
(கோர்சூபீல்டு, 1821)

சாவகம் குளக்கொக்கு என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஆழமற்ற நன்னீர் மற்றும் உப்பு நீர் ஈரநிலங்களில் காணப்படும் ஹெரான் (ஆர்டியோலா இசுபெசியோசா) சிற்றினமாகும். இதன் உணவில் பூச்சிகள், மீன் மற்றும் நண்டுகள் அடங்கும்.

சாவகம் குளக்கொக்கு பொதுவாக வெள்ளை இறக்கைகளுடன் 45 செமீ நீளமும், கருப்பு முனை கொண்ட மஞ்சள் அலகுடன், மஞ்சள் நிறக் கண்களும் கால்களும் கொண்டதாக இருக்கும். இதன் ஒட்டுமொத்த நிறம் இனச்சேர்க்கை காலத்தில் ஆரஞ்சு, வெள்ளை நிறமாகவும், இனச்சேர்க்கைக்குப் பின் பருவத்தில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இறகுகள் சீன மற்றும் இந்தியக் குளம் கொக்குகளைப் போலவே உள்ளன. மேலும் இவற்றி களத்தில் பிரித்தறிய முடியாதவையாக உள்ளன. இதன் இனப்பெருக்கக் காலம் சூன் முதல் செப்டம்பர் வரை. இது வலசைப்போதல் தன்மையுடையது.

இதனுடைய பரந்த வாழிட வரம்பு காரணமாகப் பரவியுள்ள சாவகம் குளக்கொக்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Ardeola speciosa". IUCN Red List of Threatened Species 2016: e.T22697138A93601050. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697138A93601050.en. https://www.iucnredlist.org/species/22697138/93601050. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_குளக்கொக்கு&oldid=4049244" இலிருந்து மீள்விக்கப்பட்டது