சாவா உருசா

இந்தோனேசிய மான்
சாவா உருசா
இந்தோனேசியா கிழக்கு சாவகம் தீவில் உள்ள பூங்காவில் ஆண் பெண் சாவா உருசா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆர்ட்டிடேக்டைலா
குடும்பம்:
செர்விடே
பேரினம்:
உருசா
இனம்:
திமோரென்சிசு
இருசொற் பெயரீடு
உருசா திமோரென்சிசு
பிளைன்வில்லி, 1822
பாரிய வாழிடப் பகுதிகளில் சாவா உருசா முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட மான்களும்
வேறு பெயர்கள்
பட்டியல்
  • செர்வசு செலிபென்சிசு ரோரிங், 1896
  • செர்வசு கிப்பெலாபசு குவியர், 1825 [preoccupied)]
  • செர்வசு லெப்பிடசு சண்டேவால், 1846
  • செர்வசு மொலுசென்சிசு குயாய் & கெய்மர்டு, 1830
  • செர்வசு பெரோனி குவியர், 1825
  • செர்வசு உருசா முல்லர் & செல்லிகல், 1845
  • செர்வசு தாவிஇசுடோக்கி லைடெக்கர், 1900
  • செர்வசு திமோரென்சிசு பிளைன்வில்லி, 1822
  • செர்வசு திமோரென்சு ssp. rusa முல்லர் & செல்லிகல், 1845
  • செர்வசு துன்ஜக் ஹோர்சுபீல்டு, 1830 [nomen nudum]

சாவா உருசா (Javan rusa) அல்லது சுந்தா கடமான் (உருசா திமோரென்சிசு) என்பது இந்தோனேசியா மற்றும் கிழக்குத் திமோரைச் சேர்ந்த ஒரு மான். அறிமுகப்படுத்தப்பட்ட மான்கள் தெற்கு அரைக்கோளத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.

வகைப்பாட்டியல்

தொகு
 
1988-ல் இந்தோனேசிய ரூபாய் நோட்டில் ஜாவான் உருசா

சாவா உருசாவின் ஏழு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • உ. தி. திமோரென்சிசு (திமோர் உருசா மான்) – திமோர் .
  • உ. தி. திஜாங் – மூனா மற்றும் படோன் தீவுகள்.
  • உ. தி. புளோரெசின்சிசு (புளோரெஸ் உருசா மான்) – புளோரெஸ் மற்றும் பிற தீவுகள்.
  • உ. தி. மக்காசாரிகசு (செலிப்சு உருசா மான்) – சுலாவெசி .
  • உ. தி. மொலுசென்சிசு (மலுக்கு உருசா மான்) – மலுக்கு தீவுகள் .
  • உ. தி. ரென்சிபாலி .
  • உ. தி. உருசா (சாவா உருசா மான்) – சாவகம் (தீவு) .

சிறப்பியல்புகள்

தொகு

சாவா உருசா மான், அடர் கருப்பு கலந்த பழுப்பு நிறமும், சாம்பல் நிற நெற்றியும் கொண்டது. இதன் முதுகு கருப்பாகவும், அடிப்பகுதி மற்றும் தொடையின் உள்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிறு பழுப்பு நிறமாகவும், வால் குஞ்சம் அடர் கருப்பு கலந்த பழுப்பு நிறமாகக் காணப்படும். உரோமம் கரடுமுரடானதாகவும், மற்றப் பகுதிகளைக் காட்டிலும் மார்பில் சற்று நீளமாகவும் இருக்கும். இதன் காதுகள் அகலமாகவும், தலையை விடச் சற்று சிறியதாகவும் இருக்கும். கொம்புகள் நடுத்தர நீளமாகவும் அகலமாகவும் இருக்கும், மேல் கிளை முன்னோக்கிச் செல்கிறது.[3] மான்கள் மான் குட்டிகள புள்ளிகள் இல்லாமல் பிறக்கின்றன. ஆண் மான்கள் பெண் மான்களைவிட பெரியதாகக் காணப்படும். தலை முதல் உடல் வரை நீளமானது 142 முதல் 185 செ.மீ. வரையும், வாலானது 20 செ.மீ. வரையும் இருக்கும். ஆண் மான்களின் எடை 152–160 kg (335–353 lb), வரையிலும்; இது பெண் மான்களில் 74 kg (163 lb)வாக இருக்கும்.[4]

பரவல் மற்றும் வாழ்விடம்

தொகு
 
பலூரான் தேசிய பூங்காவில் உருசா மான் மந்தை

சாவா உருசா இந்தோனேசியாவில் உள்ள ஜாவா, பாலி மற்றும் திமோர் தீவுகளில் பூர்வீகமாகக் காணப்படுகிறது. இவை இரியன் ஜெயா, போர்னியோ, லெஸ்ஸர் சுண்டா தீவுகள், மாலுகு, சுலவேசி, போன்பே, மொரிசியசு, ரீயூனியன், பிஜி, டோங்கா, சமோவா, வனுவாட்டு, சாலமன் தீவுகள், கிறிஸ்மஸ் தீவுகள், கோகோஸ் தீவுகள், நவுரு, ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, நியூ பிரிட்டன் மற்றும் நியூ அயர்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1][5] 1900களின் முற்பகுதியில் நியூ கினியாவிற்கு இடச்சுக்காரர்களால் சாவா உருசா அறிமுகப்படுத்தப்பட்டது.[6]

சூழலியல்

தொகு

உருசா மான்கள் பெரும்பாலும் அதிகாலை மற்றும் பிற்பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். இவை திறந்த வெளியில் அரிதாகவே காணப்படுகின்றன மற்றும் இவற்றின் கூரிய உணர்வுகள் மற்றும் எச்சரிக்கையான உள்ளுணர்வு காரணமாக இவற்றை அணுகுவது மிகவும் கடினம்.[சான்று தேவை]

உருசா மான் இனங்கள் மிகவும் நேசமானவை. சமுகமாகக் கூட்டாக வாழ்பவை. தனித்த மான்கள் அரிதாகவே காணப்படும். ஆபத்தான சூழலில் ஆண் மான் மிகவும் சத்தமாக ஒலி எழுப்பும். இந்த ஒலியானது அருகில் உள்ள மற்ற மான்களை எச்சரிக்கும் விதமாக அமைகின்றது. 

மற்ற மான் இனங்களைப் போலவே, சாவா உருசாவும் முக்கியமாகப் புல், இலைகள் மற்றும் மரத்திலிருந்து கீழே விழுந்த பழங்களை உண்ணும். இவை தண்ணீரைக் குடிப்பதில்லை; தேவையான அனைத்து நீரையும் தங்கள் உணவிலிருந்து பெறுகின்றன.[7][4]

வேட்டையாடுபவர்கள்

தொகு

சாவா உருசாவினை வேட்டையாடும் முக்கிய விலங்குகளாகச் சாவா சிறுத்தை, செந்நாய், முதலைகள், மலைப்பாம்புகள் மற்றும் ரின்கா, கொமோடோ டிராகன் மற்றும் புளோரஸ் தீவுகளில் உள்ள கொமோடோ டிராகன் உள்ளன.[7][4]

இனப்பெருக்கம்

தொகு

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சாவா உருசாவின் இனச்சேர்க்கை காலம் ஆகும். இக்காலத்தில் ஆண் மான்கள் உரத்த குரலில் குரைத்து, கொம்புகளுடன் சண்டையிடுகின்றன. 8 மாத கர்ப்பகால முடிவில் வசந்த காலத்தின் துவக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளைப் பெற்றெடுக்கிறது. கன்றுகள் 6-8 மாதங்கள் தாய்ப்பால் குடித்து வளர்ச்சியடைகின்றன. 3 முதல் 5 ஆண்டுகளில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. வாழ்விட சூழலினைப் பொறுத்து. சாவா உருசாவின் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகளாக உள்ளன.[7][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hedges, S.; Duckworth, J.W.; Timmins, R.J.; Semiadi, G.; Dryden, G. (2015). "Rusa timorensis". IUCN Red List of Threatened Species 2015: e.T41789A22156866. https://www.iucnredlist.org/species/41789/22156866. 
  2. Grubb, P. (2005).
  3. Leopold Fitzinger (1875). "Kritische Untersuchungen über die Arten der natürlichen Familie der Hirsche (Cervi). II. Abtheilung". Sitzungsberichte der Kaiserlichen Akademie der Wissenschaften. Mathematisch-Naturwissenschaftliche Classe 70: 239–333. https://archive.org/details/sitzungsberichte70kais/page/316/mode/2up. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Rusa, Sunda sambar". Ultimate Ungulate.
  5. Long, J.L. (2003). Introduced Mammals of the World: Their History, Distribution and Influence. Cabi Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851997483.
  6. {{cite journal |author1=Georges, A. |name-list-style=amp |author2=Guarino, F. |author3=Bito, B. |year=2006 |title=Freshwater turtles of the TransFly region of Papua New Guinea – notes on diversity, distribution, reproduction, harvest and trade |journal=Wildlife Research |volume=33 |issue=5 |pages=373–375 |doi=10.1071/wr05087 |url=http://ww.publish.csiro.au/wr/WR05087[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 7.2 Reyes, E. "Rusa timorensis". University of Michigan Museum of Zoology. Animal Diversity Web.

வெளி இணைப்புகள்

தொகு
  • "Rusa deer". Animalia.
  • "Rusa timorensis". Animal Diversity Web. University of Michigan.
  • "Feral rusa deer". Restricted invasive animals. Queensland Government, Australia. 18 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவா_உருசா&oldid=4119345" இலிருந்து மீள்விக்கப்பட்டது