சாவோ தொமே மாங்குயில்
சாவோ தொமே மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. கிராசிரோசுட்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு கிராசிரோசுட்ரிசு ஹார்ட்லாப், 1857 | |
சாவோ தொமே மாங்குயில் பரம்பல் |
சாவோ தொமே மாங்குயில் (São Tomé oriole)(ஓரியோலசு கிராசிரோசுட்ரிசு) அல்லது பெரும்-அலகு மாங்குயில் , ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இந்த சிற்றினத்திற்கு 1857-ல் கசுதவ் ஹார்ட்லாப் பெயரிட்டார். இது சாவோ டோம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
பரவல்
தொகுஇது வடகிழக்கு (சாவோ தொமே நகர்ப்புற பகுதி) தவிர, சாவோ தீவு முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இது தென்மேற்கு மற்றும் மத்திய மாசிபில் மிகவும் அதிகமாக உள்ளது.[1]
அச்சுறுத்தல்கள்
தொகுசாவோ தொமே மாங்குயில் சாவோ தொமேமின் மீதமுள்ள தாழ் நில மழைக்காடுகளின் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 BirdLife International (2018). "Oriolus crassirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706404A131471210. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706404A131471210.en. https://www.iucnredlist.org/species/22706404/131471210. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Kirby, Alex. "Many threatened birds 'need help'", BBC News (March 8, 2004).