சிங்கம் (திரைப்படத் தொடர்)
சிங்கம், ஓர் இந்திய தமிழ் மொழி அதிரடி திரைப்படத் தொடர். சமூகத்திலிருந்து ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நேர்மையான காவல்துறை அதிகாரி துரைசிங்கம். துரைசிங்கம் எனும் இந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது தான் சிங்கம் திரைப்படத் தொடர்.[1] இந்த திரைப்படத் தொடரில் தற்போது வரை மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. இவை சிங்கம் 1, சிங்கம் 2, மற்றும் சிங்கம் 3 ஆகியவை ஆகும். இம்மூன்று படங்களையும் இயக்கியவர் இயக்குநர் ஹரி, இதன் பிரதான கதாபாத்திரமான துரைசிங்கமாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத் தொடர் 2010 இல் சிங்கம் 1 வெளியீட்டில் தொடங்கியது. இந்த படம் உலக அளவில் 650 மில்லியன் ரூபாய் வசூலித்தது.[1][2] பின்னர் 2013ல் வெளிவந்த சிங்கம் 2 1.3 பில்லியன் ரூபாய் வசூலித்தது மற்றும் 2017ல் வெளிவந்த சி 3 எனும் சிங்கம் 3 திரைப்படம் 108 கோடி ரூபாய் வசூலித்தது.
கதை
தொகுசிங்கம்
தொகுதுரைசிங்கம் (சூரியா), நல்லூரின் நேர்மையான போலிஸ் துணை ஆய்வாளர் ஆவார். அவரது சக ஊழியரான எரிமலை (விவேக்) அவருக்கு உதவுகிறார். அவர் தனது கிராமத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை அகிம்சை மற்றும் பரஸ்பர ஆலோசனையுடன் தீர்க்கிறார். நிலைமை பெரியதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் தனது சக்தியைப் பயன்படுத்துகிறார். இதன் மூலம் கிராம மக்களிடமிருந்து அதிக நற்பெயரையும் அன்பையும் பெறுகிறார். மஹாலிங்கம் (நாசர்) சென்னையில் ஒரு தொழிலதிபர். இவரும் துரைசிங்கத்தின் தந்தையும் (ராதா ரவி) நண்பர்கள். அவர் தனது அழகான மகள் காவ்யா (அனுஷ்கா ஷெட்டி) உடன் கிராமத்திற்கு வருகிறார். சென்னையைச் சேர்ந்த மயில் வாகனம் (பிரகாஷ் ராஜ்), ஒரு மாபியா கும்பலின் தலைவன். பெரும் பணக்காரர்களாக இருப்பவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாலும் பல கொலைகள் செய்ததாலும் இவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. நீதிமன்ற நிபந்தனை ஜாமினில் வெளியே விடப்படுகிறார். அந்த நிபந்தனையின் படி மயில் வாகனம் நல்லூரில் கையெழுத்திட வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் தனது கூட்டாளிகளில் ஒருவரை முறைகளைச் செய்ய அனுப்புகிறார், சிங்கத்தின் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் மயில் நேரில் கையெழுத்திடக் கோருகிறார். இதற்குப் பின் மயில் வாகனத்திற்கும் சிங்கத்திற்கும் நடக்கும் சண்டை தான் கதை. இறுதியில் சிங்கம் மயில்வாகனத்தை கொன்று விடுகிறார்.
சிங்கம் 2
தொகுதுரைசிங்கம் (சூரியா) உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் இரகசியமாக சென்று தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் என்.சி.சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நடவடிக்கை பற்றி அறிந்தவர்கள் தன்னைத் தவிர முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் மட்டுமே. சத்யா (ஹன்சிகா மோத்வானி) துரைசிங்கத்தை காதலிக்கும் ஒரு மாணவி. எனினும் சிங்கம் முந்தைய படத்திலிருந்து காதலித்து வந்த காவ்யாவை (அனுஷ்கா ஷெட்டி) திருமணம் செய்து கொள்ள காத்திருக்கிறார்.
பாய் (முகேஷ் ரிஷி) மற்றும் தங்கராஜ், தூத்துக்குடியைக் கட்டுப்படுத்தும் இரண்டு குற்றவாளிகள். பாய் மற்றும் தங்கராஜ், ஒரு சர்வதேச குண்டர் மற்றும் போதைப்பொருள் பிரபுவான டேனி (டேனி சபானி) உடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடத்தல் வியாபாரத்தில் கூட்டாளிகளாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூட்டாளித்துவத்தை வெளி உலகத்துடன் மறைத்து, பொது வெளியில் இருக்கும்போது பரம எதிரிகளைப் போல நடிக்கின்றனர்.துரைசிங்கம் குற்றவாளிகளை எவ்வாறு வென்று, அவர்களின் சாம்ராஜ்யத்தை வீழ்த்தி, இறுதியாக காவ்யாவுடன் ஒன்றிணைகிறார் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.
சிங்கம் 3
தொகுநகர கமிஷனர் ராமகிருஷ்ணா (ஜெயபிரகாஷ்) கொலை வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆந்திர மாநில நாடாளுமன்றத்தில் படம் தொடங்குகிறது. அமைச்சர் கே. சத்ய நாராயணன் துரை சிங்கத்தை இவ்வழக்கு தொடர்பாக ஆந்திரா வரவழைக்கிறார். பின்னர், ஒரு சந்தேக நபரைக் கண்காணிப்பதன் மூலம் துரைசிங்கம், விட்டல் பிரசாத் என்னும் தொழில் அதிபர் ஆஸ்திரேலியாவிலிருந்து சட்டவிரோதமாக உயிர் கழிவுகள் மற்றும் மின் கழிவுகளை ஆந்திராவில் கொட்டுவதை அறிந்துக்கொள்கிறார். பின்பு துரை சிங்கத்தின் நடவடிக்கை என்ன, எவ்வாறு இந்த கும்பலைக் கட்டுப்படுத்துகிறார் என்பதே கதை.
சிங்கம் 4
தொகுசூர்யா ஹரியுடன் சேர்ந்து சிங்கம் 4 எனும் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 T. N. Ashok (16 February 2013). "Tamil films: alive and kicking". Madras Musings.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Movie Review:Singam- Review". Sify. Archived from the original on 8 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "'Singam 4' after five years: Suriya". The Times of India. 15 February 2017 இம் மூலத்தில் இருந்து 2017-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217191833/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/singam-4-after-five-years-suriya/articleshow/57165534.cms.