சிங்காய் நிலநடுக்கம், 2010

சிங்காய் நிலநடுக்கம் 2010, ஏப்ரல் 14ஆம் நாள், சீனாவின் மேற்கில் சிங்காய் மாகாணத்தில் இடம்பெற்றது. 6.9 அளவு கடும் நிலநடுக்கம்[1][2] தாக்கியதில் அறுநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தார். இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

2010 சிங்காய் நிலநடுக்கம்
சிங்காயில் நிலநடுக்கத்தின் இடம்
சிங்காயில் நிலநடுக்கத்தின் இடம்
சீனாவில் சிங்காய்
நிலநடுக்கத்தின் தோற்றம்
நாள்13 ஏப்ரல் 2010
தொடக்க நேரம்23:49:37 UTC
நிலநடுக்க அளவு6.9 Mw
ஆழம்10 கி.மீ
நிலநடுக்க மையம்{33°16′16″N 96°37′44″E / 33.271°N 96.629°E / 33.271; 96.629
பாதிக்கப்பட்ட பகுதிகள் சீனா
உயிரிழப்புகள்400+

தோற்றம் தொகு

சிங்காய் மாகாணத்தில் யூசு என்ற பகுதியில் அதிகாலை 0749 (2349 கிரீனிச் நேரம்) மணியளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றது.

விளைவு தொகு

ஜீகு என்ற நகரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது நகரின் 80 விழுக்காடு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நிலச்சரிவு காரணமாக பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 80,000 மக்கள் வாழும் இந்நகரில் குறைந்தது 10,000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகமான சிசிடிவி அறிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Magnitude 6.9 – SOUTHERN QINGHAI, CHINA". earthquake.usgs.gov. 2008-05-12. Archived from the original on 2010-04-17. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.
  2. "EMSC – European-Mediterranean Seismological Centre". Emsc-csem.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.

வெளி இணைப்புகள் தொகு

Donate to the "Yushu Earthquake Response" team பரணிடப்பட்டது 2010-04-25 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காய்_நிலநடுக்கம்,_2010&oldid=3788453" இலிருந்து மீள்விக்கப்பட்டது