சிங்கிகுளம்

கிராமம்

சிங்கிகுளம் (Singikulam) என்பது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் களக்காடு ஒன்றியத்திற்குட்ட கிராமம். இது சுமார் ஈராயிரம் ஆண்டுகள் பழமையானதாக உள்ளது என இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன[1]. இங்கு சமணர்களும், சைவர்களும், வைணவர்களும், பின்னாளில் இசுலாமியரும், கிறித்தவரும் வாழ்ந்தனர். மேலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்த தொழிலாளர்கள் வர்க்கம் நிறைந்தது இக்கிராமம். ஏனெனில் சிங்கிகுளம் அக்கால நெல்லை மாவட்டத்தில் இருந்த தொழில் நகரங்களுள் ஒன்றாக விளங்கியது என இங்குள்ள கோவில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

பெயர்க்காரணம் தொகு

சிங்கிகுளத்தின் பழைய பெயர் இராஜராஜபுரம் என்பதாகும். இங்குள்ள வரதராஜபெருமாள் கோவில் மூலவர் ராஜராஜவிண்ணகபெருமான் என்ற பெயரைத் தாங்கியவராக விளங்கியதால் அதனை முன்னிருத்தி இக்கிராமம் இராஜராஜபுரம் என அழைக்கப்பட்டது[சான்று தேவை]. இது வைணவர்களின் அதிகாரம் உயர்ந்த நிலையில் இருப்பதைக் காட்டினாலும் அதன்பின் சைவர்கள் நிலை ஓங்கியது. அதனால் "சிங்கிதேவன்" என அழைக்கப்பட்ட சிவபெருமானின் பெயரில் சிங்கிமாநகர் என்றும் சிங்கிகுளம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

சிங்கிகுளம் ஜினகிரி மலை தொகு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ள சிங்கிகுளம் கிராமம் ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு கிபி 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து சமண மதம் இருந்துள்ளது. அங்குள்ள 5 கிமீ சுற்றளவு கொண்ட பாறைக் குன்று அப்பகுதி மக்களால் மலை என அழைக்கப்படுகிறது. அம்மலையில் ஏராளமான சமணத் துறவியர் வாழ்ந்ததுள்ளனர். அதற்கு ஆதாரமாக அம்மலையில் அமைந்துள்ள கோவிலில் சமணர் திருவுருவம், பாழிகள், பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியன உள்ளன.

சிங்கிகுளம் அருகில் உள்ள களக்காட்டு மலையில் காணப்படும் ஒருவகை குரங்கின் வால் சிங்கத்தின் வால் போன்றுள்ளது. இக்குரங்கு சிம்மவால் குரங்கு எனக் குறிப்பிடப்படுகின்றது.சிங்கவால் குரங்கு ஒன்று சிங்கிகுளத்தின் அருகில் உள்ள குளத்தில் நீர் குடிக்கும்பொழுது அதன் வாலினைமட்டும் பார்த்துவிட்டு சிங்கம் எனக்கூறிவிட்டனர்.அதனால் சிங்கம் காத்தகுளமானது.அதுவே காலப்போக்கில் சிங்கிகுளமாகியது.

மருத்துவ குணமிக்க நீர்ச்சுணைகள் தொகு

சுமார் 500 அடி உயரத்தில் அமைந்த அம்மலையில் பெரிய ஆலமரங்களும் மருத்துவ குணம் நிறைந்த நீர்ச்சுனைகளும் உள்ளனர். அதிலுள்ள தண்ணீர் மிகவும் சுவையானதாகவும் வற்றாததாகவும் உள்ளது. சமர்கள் காலத்தில் இந்த மலை ஜினகிரி மலை என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] ஜினர், கிரி என்ற வடமொழி சொற்கள் முறையே சமணர்களையும் மலையையும் குறிப்பதாகும். சமணர் மலை என பொருள் பட ஜினகிரி என அழைக்கப்பட்டது.

உசாத்துணை தொகு

  1. சிங்கிகுளம் கிராம வாழ்வியல் சமூகவியல் ஒரு பார்வை (2003). சிங்கிகுளம் கிராம வாழ்வியல் சமூகவியல் ஒரு பார்வை. ம.சு.பல்கலைக்கழம், திருநெல்வேலி. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கிகுளம்&oldid=2818953" இலிருந்து மீள்விக்கப்பட்டது