சிஞ்சார் மலைகள்
சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபு மொழி: جبل سنجار Jabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கிமீ தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கிமீ நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது.[3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار | |
---|---|
சிஞ்சார் மலைகளின் செய்மதி காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,463 m (4,800 அடி) |
ஆள்கூறு | 36°22′0.22″N 41°43′18.62″E / 36.3667278°N 41.7218389°E |
புவியியல் | |
மக்கள் & வரலாறு
தொகுவரலாற்று முந்தைய காலத்தில் இம்மலைத்தொடர், அசிரியர்களுக்கும், இட்டைட்டுகளுக்கும் எல்லையாக விளங்கியது. கிமு 538-இல் பார்த்தியப் பேரரசு ஆட்சியிலும், பின்னர் சிஞ்சார் மலைகளை பார்த்தியர்களிடமிருந்து உரோமைப் பேரரசு கைப்பற்றி கிமு 115 வரை ஆட்சி செலுத்தியது. கிபி 363-இல் பைசாந்தியப் பேரரசுக்கும், சாசானியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரின் முடிவில் சிஞ்சார் மலைகள் இரு பேரரசுகளின் எல்லைகளாக விளங்கியது.
பாரசீகப் பேரரசின் ஆட்சியால், இம்மலைத்தொடர் பகுதிகளில் சொராட்டிரிய நெறி பரவத்தொடங்கியது. கிபி 4-ஆம் நூற்றாண்டில் இம்மலைப்பகுதிகளில் நெஸ்டோரியன் கிறித்தவம் தழைத்தது. கிபி 6-ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால், இம்மலைதொடர்களில் வாழ்ந்த கிறித்தவர்கள், இசுலாமிய கலீபாக்களுக்கு ஜிசியா வரியைக் கட்டி வாழ்ந்தனர்.[7]
கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் சிஞ்சார் மலைத்தொடர்களில் யசீதி மக்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்கின்றனர்.[8][9] ஊழிக்காலத்தின் முடிவில் நோவாவின் பேழை இம்மலைத்தொடரின் உயர்ந்த முகட்டில் நின்றதாக பழைய ஏற்பாடு கூறுகிறது.[10]
1920-களில் யசீதி மக்கள் அரேபியர்களாலும், மற்றவர்களாலும் துரத்தப்பட்டு இம்மலையில் தஞ்சமடைந்தனர்.[8]
3 ஆகஸ்டு 2014 அன்று சிஞ்சார் நகரம் இசுலாமிய அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 40,000 யசீதி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[11][12] [13][14] யசீதி மக்களுக்கு எதிரான இசுலாமிய அரசின் கொடூரங்களால் மக்கள் நீர், உணவு, உடை, உறைவிடம் இன்றி அலைந்து திரிந்தனர்.[15] யசீதி மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசின் விமானப் படைகள் வானிலிருந்து உணவு, நீர், மருந்துகளை யசீதி மக்களுக்கு வழங்கினர்.[16][17][18][19] 10 ஆகஸ்டு 2014 முதல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து, குர்து மக்கள் படையினர் யசீதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.[14][20][21][22] இசுலாமியப் படைகளால் 7,000 யசீதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு, 7,000 யசீதி ஆண்களின் தலை வீசப்பட்டு கொல்லப்பட்டனர்.[16][21][23] பல யசீதிப் பெண்கள் இசுலாமிய அரசுப் படையினருக்கு அஞ்சி சிஞ்சார் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[24]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Jabal Sinjār (Approved) , United States National Geospatial-Intelligence Agency
- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து جبل سنجار (Native Script) , United States National Geospatial-Intelligence Agency
- ↑ Edgell, H. S. 2006. Arabian Deserts: Nature, Origin, and Evolution. Springer, Dordrecht, The Netherlands. 592 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3969-0
- ↑ Numan, N. M. S., and N. K. AI-Azzawi. 2002. Progressive Versus Paroxysmal Alpine Folding in Sinjar Anticline Northwestern Iraq. Iraqi Journal of Earth Science. vol. 2, no.2, pp.59-69.
- ↑ Phillips, David L. (7 October 2013). "Iraqi Kurds: "No Friend but the Mountains"". Huffington Post.
- ↑ By Rudaw. "ISIS resumes attacks on Yezidis in Shingal". Rudaw.
- ↑ Fuccaro, Nelida (1995). Aspects of the social and political history of the Yazidi enclave of Jabal Sinjar (Iraq) under the British mandate, 1919-1932 (PDF). Durham University. pp. 22–3. பார்க்கப்பட்ட நாள் 13 May 2018.
- ↑ 8.0 8.1 Tim Lister (August 12, 2014). "Dehydration or massacre: Thousands caught in ISIS chokehold". CNN. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
- ↑ Fuccaro, Nelida (1999). The Other Kurds: Yazidis in Colonial Iraq. London: I.B.Tauris. pp. 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-170-1.
- ↑ Parry, Oswald Hutton (1895). Six Months in a Syrian Monastery: Being the Record of a Visit to the Head Quarters of the Syrian Church in Mesopotamia: With Some Account of the Yazidis Or Devil Worshippers of Mosul and El Jilwah, Their Sacred Book. London: H. Cox. p. 381. இணையக் கணினி நூலக மைய எண் 3968331.
- ↑ Martin Chulov (3 August 2014). "40,000 Iraqis stranded on mountain as Isis jihadists threaten death". தி கார்டியன். https://www.theguardian.com/world/2014/aug/06/40000-iraqis-stranded-mountain-isis-death-threat. பார்த்த நாள்: 2014-08-06.
- ↑ "Northern Iraq: UN voices concern about civilians’ safety, need for humanitarian aid". United Nations News Centre. 2014-08-08. https://www.un.org/apps/news/story.asp?NewsID=48444#.U-ppGGNCxI0. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ "Irak : la ville de Sinjar tombe aux mains de l'Etat islamique" (in French). Le Monde. 2014-08-03. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/03/irak-la-ville-de-sinjar-tombe-aux-mains-de-l-etat-islamique_4466279_3218.html. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ 14.0 14.1 "Thousands of Yazidis 'still trapped' on Iraq mountain". BBC News. 2014-08-12. https://www.bbc.com/news/world-middle-east-28756544. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ "People Eating Leaves to Survive on Shingal Mountain, Where Three More Die". Rûdaw.net. 2014-08-07. http://rudaw.net/english/middleeast/iraq/070820143. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ 16.0 16.1 "Iraq crisis: No quick fix, Barack Obama warns". BBC News. 2014-08-09. https://www.bbc.co.uk/news/world-middle-east-28725908. பார்த்த நாள்: 2014-08-09.
- ↑ "Britain's RAF makes second aid drop to Mount Sinjar Iraqis trapped by Isis – video". தி கார்டியன். 2014-08-12. https://www.theguardian.com/world/video/2014/aug/12/raf-drop-aid-mount-sinjar-iraqis-trapped-isis-video. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ "JTF633 supports Herc mercy dash". Media Release. Department of Defence. 22 August 2014. Archived from the original on 26 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Irak : les opérations pour sauver les réfugiés yézidis continuent" (in French). Le Monde. 2014-08-12. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/12/la-syrie-en-guerre-accueille-1-000-familles-de-refugies-fuyant-l-irak_4470547_3218.html. பார்த்த நாள்: 2014-08-12.
- ↑ Parkinson, Joe (18 August 2014). "Iraq Crisis: Kurds Push to Take Mosul Dam as U.S. Gains Controversial Guerrilla Ally". Wall Street Journal.
- ↑ 21.0 21.1 "Irak: les yazidis fuient les atrocités des djihadistes" (in French). Le Figaro. 10 August 2014 இம் மூலத்தில் இருந்து 2014-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6RjrIjnKe?url=http://www.lefigaro.fr/international/2014/08/10/01003-20140810ARTFIG00116-irak-les-frappes-americaines-se-poursuivent-tandis-que-les-yazidis-fuient-les-djihadistes.php.
- ↑ Rubin, Alissa J.; Almukhtar, Sarah; Kakol, Kamil (April 2, 2018). "In Iraq, I Found Checkpoints as Endless as the Whims of Armed Men". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/04/02/magazine/iraq-sinjar-checkpoints-militias.html?smid=tw-nytimesatwar&smtyp=cur.
- ↑ "Etat islamique en Irak : décapités, crucifiés ou exécutés, les yézidis sont massacrés par les djihadistes" (in French). Atlantico. 9 August 2014 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Rjrq80F5?url=http://www.atlantico.fr/pepites/etat-islamique-en-irak-decapites-crucifies-ou-executes-yezidis-sont-massacres-djihadistes-1698567.html.
- ↑ Ahmed, Havidar (14 August 2014). "The Yezidi Exodus, Girls Raped by ISIS Jump to their Death on Mount Shingal". Rudaw Media Network. http://rudaw.net/english/kurdistan/140820142. பார்த்த நாள்: 26 August 2014.