சிடில்ப்னோமெலேன்

பைல்லோ சிலிக்கேட்டு கனிமம்

சிடில்ப்னோமெலேன் (Stilpnomelane) என்பது K(Fe2+,Mg,Fe3+)8(Si,Al)12(O,OH)27·n(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பைலோசிலிக்கேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.[3]

சிடில்ப்னோமெலேன்
Stilpnomelane
பொதுவானாவை
வகைபைலோசிலலிக்கேட்டுகள்
சிமெக்டைட்டு குழு
வேதி வாய்பாடுK(Fe2+,Mg,Fe3+)8(Si,Al)12(O,OH)27·n(H2O)
இனங்காணல்
நிறம்கருப்பு, பச்சை கலந்த கருப்பு, மஞ்சள் கலந்த வெண்கலம், பச்சை கலந்த வெண்கலம்
படிக இயல்புதட்டு, செதில் மற்றும் இழை சீப்பு அமைப்புகளுடன்; கதிர்வீச்சு குழுக்கள்
படிக அமைப்புமுச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {001}, சமமற்ற பிளவு {010}
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3–4
மிளிர்வுபளபளப்பும் மங்கலும்
கீற்றுவண்ணம்சாம்பல் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் , ஒளிபுகாது
ஒப்படர்த்தி2.77 – 2.96
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.543 – 1.634 nβ = 1.576 – 1.745 nγ = 1.576 – 1.745
இரட்டை ஒளிவிலகல்δ = 0.033 – 0.111
பலதிசை வண்ணப்படிகமைX: பிரகாசமான தங்கம் மஞ்சள் முதல் வெளிரிய மஞ்சள் வரை Y மற்றும் Z: ஆழ்ந்த செம் பழுப்பு, ஆழ்ந்த பச்சை முதல் கிட்டத்தட்ட கருப்பு
2V கோணம்0–40 அளக்கப்பட்டது
நிறப்பிரிகைஇல்லை
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடில்ப்னோமெலேன் கனிமத்தை Stp[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

சிடில்ப்னோமெலேன் கட்டுப்பட்ட இரும்பு அமைப்புகளுடன் தொடர்புடையது. இது புளூசிசுட்டு மற்றும் கிரீன்சிசுட்டு பாறை முகங்களுடன் தொடர்புடைய ஒரு உருமாற்ற கனிமமாகும்.[1]

இது முதன்முதலில் 1827 ஆம் ஆண்டில் செக் குடியரசின் மொராவியவில் கண்டறியப்பட்டது. ஒளிரும் கருப்பு என்ற பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லில் இருந்து கனிமத்தின் பெயர் பெறப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Stilpnomelane on Mindat
  3. 3.0 3.1 Stilpnomelane on Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடில்ப்னோமெலேன்&oldid=4135091" இலிருந்து மீள்விக்கப்பட்டது