சிட்டகொங்

(சிட்டகாங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிட்டகொங் (Chittagong) (வங்காளம்: চট্টগ্রাম, Chôţţogram) பங்களாதேசத்தின் தென்கிழக்கில் உள்ள ஓர் துறைமுக மாநகரமாகும். இது தன்பெயரிலேயே வழங்கும் சிட்டகாங் கோட்டம் மற்றும் சிட்டகாங் மாவட்டம் இரண்டிற்கும் நிர்வாகத் தலைமையிட நகரம ஆகும். கர்ணபூலி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வங்காளதேசத்தின் மிக நடமாட்டமிக்க கடல் துறைமுகம் ஆகும். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகொங்கின் மக்கள்தொகை 2.5 மில்லியன்.[2]

சிட்டகொங் (சட்டோகிராம்)
চট্টগ্রাম
மாநகரம்
அடைபெயர்(கள்): சோட்டாலா,சாந்த்கா,சோடோகிராம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்சிட்டகாங் கோட்டம்
மாவட்டம்சிட்டகாங் மாவட்டம்
குடியிருப்பு1340
நகரத் தகுதி வழங்கப்பட்டது1863
அரசு
 • நகரத்தந்தைஎம் மொன்சூர் அலோம்
பரப்பளவு[1]
 • மாநகரம்168 km2 (65 sq mi)
மக்கள்தொகை (2008)[2]
 • மாநகரம்25,79,107
 • அடர்த்தி15,351/km2 (39,760/sq mi)
 • பெருநகர்38,58,093
நேர வலயம்BST (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு4000
GDP (2005)$16 பில்லியன்
அழைப்பு குறியெண்31
இணையதளம்[1]

சிட்டகொங் மலைத்தொடர்களுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ள சிட்டகொங் வங்காளதேசத்தின் முதன்மை வணிக மற்றும் தொழில் நகரமாகும். சிட்டகொங் துறைமுகம் வழியேதான் நாட்டின் பெரும்பான்மையான ஏற்றுமதி/இறக்குமதிகள் நடக்கின்றன.மேலும் வடகிழக்கு இந்தியா, நேபாளம்,பூடான், தென்கிழக்கு சீனாமற்றும் மியான்மார் ஆகியவற்றிற்கு இடைவழி சரக்கமாகச் செயல்பட துறைமுகத்தில் பல மேம்படுத்தல்களை வங்காளதேச அரசு மேற்கொண்டுள்ளது. [3][4][5] பன்னாட்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கழக அறிக்கையின்படி, உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் சிட்டகொங்கும் ஒன்று.[6] நகரின் பல பகுதிகள் குன்றுகளால் சூழப்பட்டுள்ளமையால் விரைவான வளர்ச்சி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.[7]

16வது,17வது நூற்றாண்டுகளில் இது போர்த்துக்கீசியர்களின் கீழ் போர்ட் கிராண்ட் என்றும் [8] இசுலாமாபாத்என்றும் அழைக்கப்பட்டது.[9][10][11]

மேற்கோள்கள்தொகு

 1. "Area, Population and Literacy Rate by Paurashava –2001". Bangladesh Bureau of Statistics. மூல முகவரியிலிருந்து 2008-12-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-18.
 2. 2.0 2.1 "Statistical Pocket Book, 2008" (pdf). Bangladesh Bureau of Statistics. மூல முகவரியிலிருந்து 2009-04-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-15.
 3. http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=105262
 4. http://in.reuters.com/article/idINIndia-46904220100314
 5. http://www.nepalnews.com/main/index.php/business-a-economy/5747-nepal-wants-to-use-mongla-chittagong-ports-to-boost-its-trade.html[தொடர்பிழந்த இணைப்பு]
 6. "The world’s fastest growing cities and urban areas from 2006 to 2020". City Mayors. பார்த்த நாள் 2009-09-18.
 7. Rezaul Karim, A.K.M., City Planner & Head, Dept. of Architecture & City Planning, Chittagong City Corporation(2006). "Best Practice: A Perspective of "Clean and Green" Chittagong". First 2006 Workshop Population and Environmental Protection in Urban Planning, Kobe, Japan:Asian Urban Information Centre of கோபே. 2007-11-24 அன்று அணுகப்பட்டது..[தொடர்பிழந்த இணைப்பு]
 8. See Portuguese Settlements in North Bay of Bengal http://www.colonialvoyage.com/eng/asia/bengal/index.html பரணிடப்பட்டது 2011-11-15 at the வந்தவழி இயந்திரம்
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2011-12-08 அன்று பரணிடப்பட்டது.
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2011-04-17 அன்று பரணிடப்பட்டது.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2011-11-15 அன்று பரணிடப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chittagong
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டகொங்&oldid=3318851" இருந்து மீள்விக்கப்பட்டது