சிட்டி லைட்சு

சிட்டி லைட்ஸ் (City Lights) 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம். இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்ளின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ஒரு செல்வநதர் என நம்பும் அப்பெண்ணின் கண் பார்வை சிகிச்சைக்காக ஒரு கட்டதில் சாப்லின் சிறைச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்பிலினை அப்பெண் அடையாளம் கண்டுகொண்டாளா? என்பது கதையின் நெகிழ்ச்சியான முடிவு.[1][2][3]

சிட்டி லைட்ஸ்
இயக்கம்சார்லி சாப்ளின்
கதைசார்லி சாப்ளின்
வெளியீடு1931
மொழிஆங்கிலம்

சாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது சிட்டி லைட்ஸ்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Biggest Money Pictures". Variety: p. 1. June 21, 1932. https://archive.org/stream/variety106-1932-06#page/n181/mode/1up/search/City+Lights. 
  2. Vance, Jeffrey. "City Lights" (PDF). Library of Congress. பார்க்கப்பட்ட நாள் January 9, 2021.
  3. Kehr, Dave (September 26, 1991). "U.S. Film Registry Adds 25 'Significant' Movies" (in en-US). Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-1991-09-26-9103130465-story.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_லைட்சு&oldid=4098777" இலிருந்து மீள்விக்கப்பட்டது