சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா

சிண்டி ஆர்லெட் கான்ட்ரெராஸ் பாடிஸ்டா (Cindy Arlette Contreras Bautista) (பிறப்பு: 1990 சூன் 26) [1] இவர் பெருவியன் வழக்கறிஞரும் மற்றும் பெண்களுக்கான வழக்கறிஞருமாவார். இவர் ஒரு சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார்.[2], மேலும் "டைம்" இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டார்.[3]

ஆர்லெட் கான்ட்ரெராஸ் (2017)

தாக்குதல் சம்பவம் தொகு

2015 சூலை 15 அன்று அயாகுச்சோவில் உள்ள ஒரு விடுதியில் இவரது அப்போதைய காதலன் அட்ரியானோ போசோ அரியாஸ் தாக்கப்பட்டதை அறிந்து அங்கே சென்றார். பாதுகாப்பு கேமராக்கள் இவர் தலைமுடியால் இழுத்துச் செல்லப்படுவதை பதிவு செய்தன.[4] இந்த தாக்குதலால் இவரது ஒரு கால் சேதமடைந்தது. பின்னர் இவர் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டியது அவசியமானது.[5] கான்ட்ரெராஸ் தனது நீதிக்கான கோரிக்கையை பொதுவெளியில் சென்றார். மேலும் தனது வழக்கை ஊடகங்களில் எழுதினார்.

இவர் மீதான தாக்குதல் நடத்தியவனுக்கு எதிரான சான்றுகள் தண்டனைக்கு போதுமானதாக இருந்தன. ஆனால் மூன்று நீதிபதிகள் குழு 2016 சூலையில் சந்தேகமான தீர்ப்பினை வழங்கியது.[3][6] இவருக்கு எதிரான வன்முறை மற்றும் சிகிச்சையானது நாடு தழுவிய நியுனாமெனோஸ் இயக்கத்திற்கு ஒரு அணிவகுப்பு புள்ளியாக மாறியது. லிமாவில் நடந்த அணிவகுப்பு பெருவில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் என்று கூறப்பட்டது.[7] 2016 நவம்பரில், அயாகுச்சோ உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த தண்டனையை நிராகரித்து, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்ணை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் புதிய வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.[8] 20196 சூலை 8 அன்று, குற்றவாளி இவரை கொலை செய்ய முயன்றதற்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் கற்பழிப்பு முயற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.[9]

அங்கீகாரம் தொகு

2017ஆம் ஆண்டில் கான்ட்ரெராஸின் வாதத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரித்தது. இவர் வாஷிங்டனில் தலா ஒரு சர்வதேச வீரதீர பெண்கள் விருதப் பெற பன்னிரண்டு பேருடன் இவரையும் தேர்ந்தெடுத்தது. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலிலும் இவர் ஒரு "குறியீடாக" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும், 2018இல் பிபிசியின் 100 பெண்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டார்.[10]

குறிப்புகள் தொகு

  1. "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). https://www.bbc.com/news/world-46225037. 
  2. "Biographies of the Finalists for the 2017 International Women of Courage Awards". www.state.gov (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-03-29. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
  3. 3.0 3.1 3.2 "Cindy Arlette Contreras Bautista: The World's 100 Most Influential People". Time. பார்க்கப்பட்ட நாள் 2017-08-16.
  4. "Minuto a minuto de la agresión de Adriano Pozo a Cindy Contreras". Frecuencia Latina. July 19, 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2016.
  5. Beatríz Pascual Macías (29 March 2017). "Arlette Contreras, la mujer que venció al dolor y lucha contra los femicidios". El País. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
  6. "Corte Superior de Justicia de Ayacucho, Juzgado Penal Colegiado de Huamanga. Expediente 01641-2015-0501-JR-PE-01. Sentencia" (in Spanish). 2016. பார்க்கப்பட்ட நாள் August 13, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "El Perú de pie contra la violencia de género". Diario UNO (in Spanish). August 14, 2016. Archived from the original on அக்டோபர் 21, 2016. பார்க்கப்பட்ட நாள் August 14, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Caso Arlette Contreras: declaran nula sentencia contra Adriano Pozo, Con la finalidad de que se inicie un nuevo proceso que incluya los delitos de violación e intento de feminicidio". Exitosa. 18 November 2016. Archived from the original on 24 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. cite web|title=Caso Arlette Contreras: sentencian a 11 años de prisión a Adriano Pozo|url=https://elcomercio.pe/lima/judiciales/caso-arlette-contreras-sentencian-11-anos-prision-adriano-pozo-tentativa-feminicidio-noticia-ecpm-653524%7Cwork=El Comercio (Peru)|date=8 July 2019|accessdate=8 July 2019}}
  10. "BBC 100 Women 2018: Who is on the list?". https://www.bbc.com/news/world-46225037.