சிதாராதேவி
சிதாராதேவி (Sitara Devi) (8 நவம்பர் 1920 – 25 நவம்பர் 2014) இந்தியாவின் புகழ் பெற்ற கதக் நாட்டியக் கலைஞர் ஆவார். தனது 16வது அகவையில் முதல் கதக் நாட்டியம் அரங்கேற்றம் செய்தவர்.[1] கதக் நாட்டியத்தின் இராணி என்ற அடைமொழியுடன் விளங்குபவர்.[2]இரவீந்திரநாத் தாகூரால் நாட்டியப் பேரரசி எனப் பாராட்டு பெற்றவர்.
சிதாராதேவி | |
---|---|
![]() 2009ல் சிதாராதேவி | |
பிறப்பு | தனலெட்சுமி 8 நவம்பர் 1920 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 25 நவம்பர் 2014 மும்பை, இந்தியா | (அகவை 94)
தேசியம் | இந்தியர் |
பணி | கதக் நாட்டியக் கலைஞர் |
வாழ்க்கைத் துணை | பிரதாப் பரோத் |
பிள்ளைகள் | ரஞ்சித் பரோத், ஜெயந்தி மாலா |
சிதாராதேவி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கதக் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குறிப்பாக 1967ல் இலண்டன் ஆல்பர்ட் அரச மண்டபத்திலும், 1976ல் நியூயார்க் கமேஜி மண்டபத்திலும் கதக் நடனம் ஆடி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்.[3]
இளமை தொகு
சிதாரா தேவி, வாராணசியின் அந்தணத் தம்பதியரான சுகதேவர் - மத்சயகுமாரிக்கு கொல்கத்தாவில் 8 நவம்பர் 1920ல் தனலெட்சுமி எனும் இயற்பெயருடன் பிறந்தவர்.[4] சுகதேவர் நேபாள மன்னரவை நாட்டியக் கலைஞராக இருந்தவர். பின்னர் மீண்டும் வாரணாசியில் தங்கி தன் மகள்களான சிதராதேவியுடன், தாரா மற்றும் அலக்நந்தா ஆகியவர்களுக்கு நாட்டியப் பயிற்சி அளித்தார்.[5]
சிதாராதேவி தனது 16வது அகவையில் மும்பையின் ஒரு மண்டபத்தில் கதக் நாட்டியத்தை முதல் முறையாக அரங்கேற்றம் செய்தார்.
மும்பை இந்தி திரைப்பட இயக்குனரான நிரஞ்சன் சர்மா, சிதாரா தேவிக்கு திரைப்பட நடன யுக்திகளை கற்று கொடுத்தார். உஷா ஹரன் (1940), நாகினா (1951), ரோட்டி (1942), அஞ்சலி (1957), மதர் இந்தியா (1957) முதலிய் இந்தித் திரைப்படங்களில் சிதாராதேவி நாட்டியக் கலைஞராக நடித்தார்.
குடும்பம் தொகு
சிதாரா தேவி, பிரதாப் பரோத் என்பவரை மணந்து இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார்.[6][7]
விருதுகளும், சிறப்புகளும் தொகு
- சங்கீத நாடக அகாதமி விருது, 1969. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[8]
- பத்ம ஸ்ரீ, 1973
- காளிதாஸ் சம்மன் விருது, 1995
- இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கிய போது, அதை பெற மறுத்துவிட்டார்.[9]
- இவரது 97வது பிறந்த நாளான 8 நவம்பர் 2017ஐ சிறப்பிக்கு பொருட்டு, கூகுள் டூடிலில் சித்திரம் வெளியிட்டது.[10][11]
பிந்தைய வாழ்க்கை தொகு
சிதாரா தேவி கதக் நாட்டியக் கலைஞராக இருந்த போதும், பரத நாட்டியம், உருசியாவின் பாலே நடனத்தையும் அறிந்தவர். இந்தி திரைப்பட கலைஞர்களுக்கு கதக் நாட்டியப் பயிற்சி வழங்கியவர்.
சிதாரா தேவி நீண்ட கால நோய் காரணமாக தனது 94வது அகவையில் மறைந்தார்.[12][13]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Empress of Kathak". Indian Express. 3 September 2011. http://www.indianexpress.com/news/empress-of-kathak/840852/. பார்த்த நாள்: 25 January 2012.
- ↑ Mishra, Susheela (1972). Illustrated Weekly of India, Volume 99, Issue 3. பக். 43. https://books.google.com/?id=NGc6AQAAIAAJ&q=Sitara+Devi+-+Kathak+queen&dq=Sitara+Devi+-+Kathak+queen.
- ↑ "Sitara Devi – The Kathak Legend". India Travel Times இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140330112958/http://www.indiatraveltimes.com/week/week_17.html. பார்த்த நாள்: 25 January 2012.
- ↑ "Dhanteras on 8th November 1920". http://www.drikpanchang.com/festivals/dhanteras/festivals-dhanteras-puja-timings.html?year=1920.
- ↑ Kothari, Sunil (27 November 2014). "Long live the star". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/sitara-devi-obituary/article6639595.ece. பார்த்த நாள்: 28 November 2014.
- ↑ https://chiloka.com/celebrity/sitara-devi-hindi
- ↑ "My mother's responsible for my musical inclination: Ranjit Barot". The Times of India(TOI). 17 March 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news-and-interviews/My-mothers-responsible-for-my-musical-inclination-Ranjit-Barot/articleshow/19016127.cms. பார்த்த நாள்: 4 April 2014.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
- ↑ "Sitara Devi turns down Padma Bhushan – Times of India". http://timesofindia.indiatimes.com/city/mumbai/Sitara-Devi-turns-down-Padma-Bhushan/articleshow/1091893780.cms.
- ↑ https://www.google.com/doodles/sitara-devis-97th-birthday
- ↑ https://www.youtube.com/watch?v=Jktv3PdWiBg
- ↑ "Danseuse Sitara Devi passes away – The Economic Times". 25 November 2014. http://economictimes.indiatimes.com/magazines/panache/danseuse-sitara-devi-passes-away/articleshow/45266779.cms. பார்த்த நாள்: 25 November 2014.
- ↑ "Kathak danseuse Sitara Devi passes away in Mumbai". Zee News. 25 November 2014. http://zeenews.india.com/entertainment/art-theatre/kathak-danseuse-sitara-devi-passes-away-in-mumbai_1504347.html. பார்த்த நாள்: 25 November 2014.
- India's 50 Most Illustrious Women (ISBN 81-88086-19-3) by Indra Gupta
வெளி இணைப்புகள் தொகு
- சிதாராதேவியின் கதக் நடனக் காணொளி
- ரோட்டி திரைப்படத்தில் சிதாராதேவியின் நடனக் காணொளி</ref>
- Interesting Facts About Sitara Devi பரணிடப்பட்டது 2018-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Rare Pictures of Sitara Devi, her sisters Alaknanda & Tara https://www.flickr.com/photos/rashid_ashraf/31619687025/