சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள்

சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் அல்லது வட இந்திய காயஸ்தர்கள் (Chitraguptavanshi Kayastha) இந்து சமயத்தின் மூவகை காயஸ்தர்களில் ஒரு பிரிவினர் ஆவார். மற்ற இரு காயஸ்தப் பிரிவினர்கள் வங்காள காயஸ்தர் மற்றும் மகாராட்டிர காயஸ்தர் ஆவார். சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் இந்தி மொழி பேசும் வட இந்தியாவில் அதிகம் வாழ்கின்றனர். இம்மக்கள் தங்களை எமதர்மராஜனின் கணக்கரான சித்திரகுப்தனின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக்கொள்கிறார்கள்.[2][3][4] [5]சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் தங்களுக்குள் பனிரெண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சித்திரகுப்தனின் இரண்டு மனைவிகளான நந்தினி மற்றும் சோபாதேவிக்கு பிறந்த 12 மகன்களின் சந்ததியினர் எனக்கூறிக்கொள்கின்றனர்.[6][7]

சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள்
இரு மனைவியர் மற்றும் 12 மகன்களுடன் சித்திரகுப்தர்[1]
மதங்கள்இந்து சமயம்
மொழிகள்இந்தி
பகுதிவட இந்தியா மற்றும் நேபாளம்
உட்பிரிவுகள்சிறீவத்வசவா, மாத்தூர், சக்சேனா, நிகாம், குல்சிரஷ்தா, பட்நாகர், அம்பஷ்தா, அஷ்தானா, சூர்யத்வாஜ், கௌர், கர்ணா, வால்மீகி

காயஸ்தர் எனும் சொல் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் இந்திய இலக்கியங்களில் காணப்படுகிறது.[8] வட இந்திய காயஸ்தர்கள் உயர்-அதிகார வர்க்கத்தின் கூறுகளாக இருந்தனர் மற்றும் இந்து மன்னர்களின் கீழ் மிகவும் செல்வாக்கு மிக்க நகர்ப்புற உயரடுக்குப் பிரிவினராக வாழ்ந்தனர். இம்மக்களை குறித்த குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், இந்து சமய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மீது படையெடுத்து இசுலாமியர்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் முதன்முதலாக பாரசீக மொழியைக் கற்றுத் தேர்ந்ததால், இவர்கள் இந்து-இசுலாமிய சமூகங்களுக்கும் மற்றும் தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசுகளுக்கு இணைப்புப் பாலமாக விளங்கினர்.இம்மக்களில் சிலர் இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினர்.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, சித்திரகுப்த வம்ச காயஸ்த குடும்பங்களில் பல கிராமக் கணக்கர்களாக பதவி பெற்றனர்.[9]1919ஆம் ஆண்டில் வட இந்தியா முழுவதும், குறிப்பாக ஆக்ரா-அயோத்தி மாகாணத்தின் அரசு அதிகாரிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் சத்திரகுப்த வம்ச காயஸ்தர்களாக இருந்தனர்.[10]

வரலாறு

தொகு

இந்திய-இசுலாமியர் காலம்

தொகு

முகலாயப் பேரரசில் எழுத்துப் பணியில் சிறந்த இச்சமூகத்தினர் அரசவையின் நிலவரி வசூல், நீதிமன்றம், சுங்கச்சாவடி போன்ற துறைகளில் பரம்பரை பரம்பரையாகப் பணியாற்றினர்.[11] அரபு மொழி மற்றும் பாரசீக மொழியை கற்றறிந்த காயஸ்த மக்களில் பலர் முகலாய அரசவையில் அங்கம் வகித்தனர்.[12]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில்

தொகு

இந்தியாவில் கம்பெனி ஆட்சியில் போது, 1820களில் நிலவரி வசூல் கணக்குப் பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் நிலவரி வசூலைச் செய்யும் கிராமக் கணக்காளர்களாக இச்சமூகத்தினர் பணி செய்தனர்.[13] சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்கு பின் வந்த பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் அயோத்தி நவாப் ஆண்ட அவத் பிரதேசங்களை இந்தியாவுடன் இணைத்த போது இச்சமூகத்தினர் உதவியாக உதவினர்.[14]

1931 மக்கள் தொகை கணக்கெடுப்பில்

தொகு

1931ஆம் ஆண்டின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்திரகுப்த வம்ச காயஸ்த ஆண்களில் 70% மற்றும் 7 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 19% எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர்.[15][16]

Table 2. 1931ஆம் ஆண்டின் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தின் எழுத்தறிவு விகிதம் [15]
சாதி ஆண் எழுத்தறிவு (%) பெண் எழத்தறிவு (%)
காயஸ்தர் 70 19
வைசியர் 38 6
சையத்துகள் 38 9
பூமிகார் 31 3
பிராமணர் 29 3
முகலாயர் 26 5
பதான்கள் 15 2

நவீன இந்தியாவில்

தொகு

நவீன இந்தியா முழுவதும் சித்திரகுப்த வம்ச காயஸ்த சமூகத்தினர் நன்கு கல்வி அறிவு பெற்றவர்களாகவும், மேல்தட்டு மக்களாகவும், நகரவாசிகளாகவும் உள்ளனர்.[17][18][19]

சமூக அந்தஸ்து

தொகு

காயஸ்தர்கள் பிரித்தானிய இந்தியாவில் அதிகாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், ஆசிரியர்களாக, கிராம நிர்வாக கணக்காளர்களாகவும் பணியாற்றினர். பின்னர் 1990ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக காயஸ்தர்களுக்கு அரசு வேலை வழங்குவதைக் குறைத்துக் கொண்டது. [20][21]இந்திய அரசு இம்மக்களை முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் வைத்துள்ளது.[22]

சமூகம் மற்றும் பண்பாடு

தொகு

சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் அடிப்படையில் 12 உட்பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரே பிரிவினருக்குள் அகமணம் திருமணம் செய்து கொள்வதில்லை.

எழுத்துமுறை

தொகு
மேல்: சேர் சா சூரியின் நாணயத்தில் கைத்தி எழுத்துக்கள் அடியில்: சித்திரகுப்த பூஜையில் வைக்கப்படும் எழுதுகோல் மற்றும் காகிதங்கள்

வட இந்தியாவின் அவத் மற்றும் பிகாரில் பயன்படுத்தப்படும் பிராமிய குடும்பத்தின் கைத்தி எழுத்துறையின் பெயர் காயஸ்தா என்ற சொல்லிருந்து பெறப்பட்டது.[23]கிபி 16ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசில் கைத்தி எழுத்துறை[24] ஆவணங்களில் பயன்பாட்டில் இருந்தது.

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது அவத் போன்ற பிரதேசங்களில், அரசு ஆவணங்கள் மற்றும் வழக்காடு மன்றங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் கைத்தி எழுத்துமுறை பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றது.[25]

பெண்கள்

தொகு

பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது வட இந்திய சித்திரகுப்த வம்ச காயஸ்தப் பெண்கள் பள்ளிக் கல்வி பெற அனுமதிக்கப்பட்டனர்.[26] Some patriarchs of the caste also seemed to have kept concubines.[27][28]

2015ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, பிற சமூகப் பெண்களை விட, மாவட்ட நீதிமன்றங்களில் காயஸ்த பெண் வழக்கறிஞர்கள் அதிகம் வழக்காடினர். சித்திரகுப்த வம்ச காயஸ்த ஆண்கள் மற்றும் பெண்கள் வேளாண்மை செய்வதை விட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் அதிகம் பணிபுரிந்தனர். சராசரி திருமண வயதை விட கூடுதல் வயதில் காயஸ்த பெண்கள் திருமணம் புரிந்தனர்.[29]

திருவிழாக்கள்

தொகு

மற்ற இந்து சமயத்தினர் போல் வட இந்திய சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் அனைத்து முக்கிய இந்து சமய விழாக்களை கொண்டாடினாலும், தீபாவளியை ஒட்டி சித்திரகுப்த பூஜையை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.[30][31]

சித்திரகுப்த பூஜையின் இம்மக்கள் எழுதுகோல்கள், புத்தகங்கள், மை புட்டிகள் வைத்து வழிபடுபவர்.[32]

உணவு

தொகு

சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் காய்கறிகளுடன் மாமிசமும் உண்பார்கள்.[33] [34]

குறிப்பிடத் தக்கவர்கள்

தொகு
  1. இராசேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
  2. லால் பகதூர் சாஸ்திரி - இரண்டாவது இந்தியப் பிரதமர்
  3. பிரேம்சந்த் - எழுத்தாளர்
  4. ஹர் தயால் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
  5. சாந்தி சுவரூப் பட்நாகர் - அறிவியலாளர்
  6. யஷ்வந்த் சின்கா - இந்திய அரசியல்வாதி
  7. மகாமாயா பிரசாத் சின்கா - பிகார் முன்னாள் முதலமைச்சர்
  8. இரவி சங்கர் பிரசாத் - பாஜக அரசியல்வாதி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hayden J. Bellenoit (17 February 2017). The Formation of the Colonial State in India: Scribes, Paper and Taxes, 1760–1860. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. The north Indian Kayasthas are divided into 12 subgroups, reflecting King Chitragupta's marriage to Devi Nandini and Devi Shobhavati
  2. Davidson, Ronald M (2005). Tibetan renaissance: Tantric Buddhism in the rebirth of Tibetan culture (in English). New York: Columbia University Press. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-50889-6. இணையக் கணினி நூலக மைய எண் 808346313.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Stout, Lucy Carol (1976). The Hindustani Kayasthas: The Kayastha Pathshala, and the Kayastha Conference, 1873-1914 (in ஆங்கிலம்). University of California, Berkeley. p. 14.
  4. R. B. Mandal (1981). Frontiers in Migration Analysis. Concept Publishing Company. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-03-91-02471-7.
  5. Srivastava, Vinay Kumar (2016). "Speaking of Caste: Merit of the Principle of Segmentation". Sociological Bulletin 65 (3): 317–338. doi:10.1177/0038022920160302. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-0229. https://journals.sagepub.com/doi/10.1177/0038022920160302. "Chitragupta is generally identified with a long, flowing notebook (bahi)...His assistant has temples that the Kayastha have built to venerate him, for he is their ancestor. On the day of his annual worship...". 
  6. Hayden J. Bellenoit (17 February 2017). The Formation of the Colonial State in India: Scribes, Paper and Taxes, 1760–1860. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. The north Indian Kayasthas are divided into 12 subgroups, reflecting King Chitragupta's marriage to Devi Nandini and Devi Shobhavati
  7. Rajnī Kānt Śāstrī (1949). Hindū jati kā utthān aur patan. Kitab Mahal. अब चित्रगुप्त के विवाह संबंध की वार्ता सुनिए। इनकी दो स्त्रियां थीं-(१)सुशर्मा ब्राह्मण की कन्या शुभावती (ब्राह्मणी) जिसके आठ पुत्र हुए श्रौर (२)श्राद्धदेव मनु की पुत्री नन्दिनी (चत्रिया) जिसके चार पुत्र हुए।
  8. Visvanathan, Meera (2014). "From the 'lekhaka' to the Kāyastha: Scribes in Early Historic Court and Society (200 BCE–200 CE)". Proceedings of the Indian History Congress 75: 34–40. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44158358. 
  9. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  10. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  11. BELLENOIT, HAYDEN (2014). "Between qanungos and clerks: the cultural and service worlds of Hindustan's pensmen, c. 1750–1850". Modern Asian Studies 48 (4): 882. doi:10.1017/S0026749X13000218. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-749X. https://www.jstor.org/stable/24494608. 
  12. Bellenoit, Hayden J. (2017). "Revenue administration and scribal skills in late Mughal India, c. 1650-1750". The Formation of the Colonial State in India: Scribes, Paper and Taxes, 1760-1860 (in ஆங்கிலம்). Routledge. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49436-1.
  13. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. pp. 67–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  14. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  15. 15.0 15.1 "United Provinces of Agra and Oudh - Census 1931". p. 460.
  16. Bellenoit, Hayden (2022). "Flesh, booze and (contested) lineages: Kayasthas, caste and colonial ethnography 1870-1930" (in en). South Asian History and Culture 13 (2): 172–173. doi:10.1080/19472498.2022.2067637. பன்னாட்டுத் தர தொடர் எண்:1947-2498. https://www.tandfonline.com/doi/full/10.1080/19472498.2022.2067637. 
  17. Pavan K. Varma (2007). The Great Indian Middle class. Penguin Books. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143103257. ...its main adherents came from those in government service, qualified professionals such as doctors, engineers and lawyers, business entrepreneurs, teachers in schools in the bigger cities and in the institutes of higher education, journalists [etc]...The upper castes dominated the Indian middle class. Prominent among its members were Punjabi Khatris, Kashmiri Pandits and South Indian brahmins. Then there were the 'traditional urban-oriented professional castes such as the Nagars of Gujarat, the Chitpawans and the Ckps (Chandrasenya Kayastha Prabhus)s of Maharashtra and the Kayasthas of North India. Also included were the old elite groups that emerged during the colonial rule: the Probasi and the Bhadralok Bengalis, the Parsis and the upper crusts of Muslim and Christian communities. Education was a common thread that bound together this pan Indian elite... But almost all its members spoke and wrote English and had had some education beyond school
  18. Paul Wallace; Richard Leonard Park (1985). Region and nation in India. Oxford & IBH Pub. Co. During much of the 19th century, Maratha Brahman Desasthas had held a position of such strength throughout South India that their position can only be compared with that of the Kayasthas and Khatris of North India.
  19. Bellenoit, Hayden J. (2017). "Kayasthas, 'caste' and administration under the Raj, c.1860–1900". The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959. They were broadly considered by various Indian, British and missionary observers to be the most learned and influential of the "service castes".{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  20. Bellenoit, Hayden J. (2017). The Formation of the Colonial State in India: Scribes, Paper and Taxes, 1760-1860. Taylor & Francis. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3.
  21. Stout, Lucy Carol (1976). The Hindustani Kayasthas: The Kayastha Pathshala, and the Kayastha Conference, 1873-1914 (in ஆங்கிலம்). University of California, Berkeley. p. 25.
  22. Srinivasan, K.; Kumar, Sanjay (16–23 October 1999). "Economic and Caste Criteria in Definition of Backwardness". Economic and Political Weekly 34 (42/43): 3052. 
  23. Grierson, George A. 1899. A Handbook to the Kaithi Character. Calcutta: Thacker, Spink & Co.
  24. Kaithi
  25. Rai, Alok (2007). Hindi Nationalism (Reprint ed.). London: Sangam Books. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1979-4.
  26. Bengal; Beverley, H. (1872). Report of the Census of Bengal, 1872 (in ஆங்கிலம்). Bengal Secretariat Press. pp. 170–172. ...they are however kept in much greater seclusion than women of the rajputs...
  27. Martin, Robert Montgomery (1838). Behar (Patna City) And Shahabad (in ஆங்கிலம்). p. 186. The Rajputs, Khatris and Kayasthas....openly keep women slaves....
  28. Gopal, Madan (2020-02-01). Kalam Ka Majdoor : Premchand (in ஆங்கிலம்). Rajkamal Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88933-48-3. प्रेमचन्द की रखैल शायद....
  29. Mishra, Saurabh Kumar (2015). "Women in Indian Courts of Law: A Study of Women Legal Professionals in the District Court of Lucknow, Uttar Pradesh, India" (in en). e-cadernos CES (24). doi:10.4000/eces.1976. பன்னாட்டுத் தர தொடர் எண்:1647-0737. https://journals.openedition.org/eces/1976. 
  30. Sahay, Gaurang R. (2019), Mukherji, Partha Nath; Jayaram, N.; Ghosh, Bhola Nath (eds.), "Caste, Economy and Power: Changing Rural Bihar", Understanding Social Dynamics in South Asia (in ஆங்கிலம்), Singapore: Springer Singapore, pp. 83–106, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-981-13-0387-6_6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-13-0386-9, In villages, the castes publicly proclaim their belief in separate origin tales by worshiping their originators or the primary representatives of their castes in the form of deities. The organisation and celebration of the Govardhan Puja by the Yadavs, the Chitragupta Puja by the Kayasthas...
  31. Singh, R.P (2022). Hinduism and tribal religions. Jeffery D. Long, Rita DasGupta Sherma, Pankaj Jain, Madhu Khanna. Dordrecht, The Netherlands: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-024-1188-1. இணையக் கணினி நூலக மைய எண் 1295270024.
  32. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959. One example is the 'pen and inkpot prayer' (qalam dawat puja). This puja, a veneration of the pen, inkpot and Chitragupta, was symbolic not only of their heritage...{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  33. Chaudhuri, Zinnia Ray. "A history of Kayasth cuisine brings back memories of winter afternoons". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.
  34. Bellenoit, H. J. A. (2017). The formation of the colonial state in India : scribes, paper and taxes, 1760-1860. Milton Park, Abingdon, Oxon. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-49429-3. இணையக் கணினி நூலக மைய எண் 973222959. Kayasthas took quickly to meat eating...Yet, it must be stressed that...{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

ஆதார நூற்பட்டியல்

தொகு
  1. Sinha, Ranjit K. (2014). The Kayastha Caste of India: Antiquity, Tradition and Modernity. Patna, Bihar: Indo books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789350741139.
  2. Prasad, K.; LLC, Books (2018). The Kayastha Ethnology, an Enquiry Into the Origin of the Chitraguptavansi and Chandrasenavansi Kayasthas. Creative Media Partners. pp. 34–69, 75–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780343919894.