சித்த மருத்துவத்தில் விலங்கினங்கள்

சித்த மருத்துவத்தில் விலங்கினங்கள்தொகு

சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால இலக்கியங்கள் வரை, விலங்குகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை வகைபடுத்தி அவற்றின் நன்மை தீமைகளை சித்தர்கள் விளக்கியுள்ளனர். மேலும் அவற்றிலிருந்து நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரித்து பயன்படுத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னுரைதொகு

சித்தர்கள் தம் பாடல்களில் நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய விளங்கினங்களை பற்றி பாடியுள்ளனர். சித்த மருத்துவத்தில் உள்ள விலங்குகளை இருவகையாக குறிப்பிட்டுள்ளனர்.

  1. நிலப் பிராணி
  2. நீர்ப் பிரானி

இறைச்சியின் தன்மைதொகு

நீரில் வாழக்கூடிய விலங்கினங்களின் இறைசியானது

  1. உண்ணுவதற்கு சுவையாகவும்
  2. மென்மையாகவும்,
  3. இயற்கையில் இனிப்பு கலந்த சுவையுடனும்
  4. நல்ல பசியை உண்டாகுவதுடன்
  5. பித்தம் போக்கும் தன்மையுடையதாகவும்

சித்தர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

நீப்பகுதியிலும் சதுப்பு நிலத்திலும் வாழ்கின்ற உயிரினங்களை நான்கு வகையாகவும், நிலத்தில் வாழுகின்ற உயிரினங்களை எட்டு வகையாகவும் பிரித்து அவற்றின் மருத்துவ குணங்களையும் சிறப்பாக சித்த மருத்துவத்தில் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தகவலுக்காகதொகு