சிந்து பைரவி (திரைப்படம்)
சிந்து பைரவி (Sindhu Bhairavi) 1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகாசினி, சிவக்குமார்[1] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
சிந்து பைரவி | |
---|---|
Official DVD Box Cover | |
இயக்கம் | கே.பாலச்சந்தர் |
தயாரிப்பு | ராஜம் பாலச்சந்தர் கே.பாலச்சந்தர் |
கதை | கே.பாலச்சந்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுஹாசினி சிவகுமார் சுலக்சனா டெல்லி கணேஷ் ஜனகராஜ் |
விநியோகம் | கவிதாலயா புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 1985 |
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கருநாடக இசை மேதையாக விளங்குபவரான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் ஒரு சமயம் சுகாசினியைச் சந்திக்கின்றார். சுகாசினியும் அவருக்குச் சவாலாக கருநாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும்வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். ஏனெனில் கருநாடக சங்கீதத்தில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் வடமொழியின் தொற்றுதல்கள். இவரின் இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். அந்த மேடையில் பாடி பலரது கைதட்டுதல்களையும் பெறும் சுகாசினியைக் காதலும் செய்கின்றார் சிவக்குமார். இசையின் மீதான ஆர்வம் சற்றும் இல்லாத தனது மனைவியினை வெறுக்கும் சிவக்குமார் பின்னர் சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அவர் மனைவி அவருடன் சேருகின்றாரா என்பதே கதையின் முடிவு.
நடிப்பு
தொகு- சிவகுமார் - ஜே. கே பாலகணபதியாக
- சுஹாசினி- சிந்து
- சுலக்சனா- பைரவி
- டெல்லி கணேஷ்- குருமூர்த்தியாக
- ஜனகராஜ்- கஜபதியாக
- பிரதாப் போத்தன்- சஞ்சீவியாக
- டி. எஸ். இராகவேந்திரா- நீதிபதி பாரதி கண்ணனாக
- மணிமாலா- சிந்துவின் தாயாக
- சார்லி- ராமானுஜமாக
- கவிதாலயா கிருஷ்ணன் - பாரதி கண்ணனின் வண்டி ஓட்டுநர்
- ஆர். சுந்தரமூர்த்தி ஜே.கே.பி.யின் வண்டி ஓட்டுநர்
விருதுகள்
தொகுபாடல்கள்
தொகு- கலை வாணியே - கே. ஜே. யேசுதாஸ்
- மகாகணபதிம் - கே. ஜே. யேசுதாஸ்
- மரி மரி நின்னே - கே. ஜே. யேசுதாஸ்
- மோகம் எனும் - கே. ஜே. யேசுதாஸ்
- நான் ஒரு சிந்து - கே.எஸ் சித்ரா
- பாடறியேன் படிப்பறியேன் - கே.எஸ் சித்ரா
- பூமாலை வாங்கி - கே. ஜே. யேசுதாஸ்
- தண்ணி தொட்டி - கே. ஜே. யேசுதாஸ்
- ஆனந்த நடனம் - கே. ஜே. யேசுதாஸ்
- அத்கித்ய - கே. ஜே. யேசுதாஸ்
- நீ தய ராதா - கே. ஜே. யேசுதாஸ்
- யோச்சனா கமல லோச்சனா - கே. ஜே. யேசுதாஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024.
- ↑ "மறக்க முடியுமா? - சிந்து பைரவி".