சினே பார்கவா
சினே பார்கவா (Sneh Bhargava) ஓர் இந்திய கதிரியக்க நிபுணராவார். இவர் மருத்துவக் கல்வியாளர், முன்னாள் இயக்குனர், புதுதில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பேராசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்துள்ளார்.[1] 1930 aஅம் ஆண்டு பிறந்த பார்கவா இந்தியாவின் முதன்மை அறிவியல் சங்கங்களில் ஒன்றான இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் [1] துணைத் தலைவராகவும் [2] இருந்துள்ளார். பார்கவா பல முக்கிய சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார்.[3] இந்திய மருத்துவ கழகத்தின் மருத்துவ நெறிமுறைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஒரு பகுதியாக இருந்தார்.[4][5] எய்ம்சு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் புதுதில்லியின் மயூர் விகாரில் இயங்கும் தர்மசில்லா நாராயண சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்தார்.[6] பார்கவாவின் மருத்துவ சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசு 1991 ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[7]
சினே பார்கவா Sneh Bhargava | |
---|---|
பிறப்பு | 1930 இந்தியா |
பணி | கதிரியக்க நிபுணர் மருத்துவக் கல்வியாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "NASI Fellow". National Academy of Sciences, India. 2015. Archived from the original on மார்ச் 15, 2016. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Recent Past Officers". National Institute of Sciences, India. 2015. Archived from the original on நவம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ "Keynote address". All Events. 2015. Archived from the original on நவம்பர் 17, 2015. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ "MCI to hold probe in drug trial case". Times of India. 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ Ada Scupola (2009). Providing Telemental Health Services after Disasters: A Case Based on the Post-Tsunami Experience. Idea Group Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781605666464.
- ↑ "ND TV profile". ND TV. 2015. பார்க்கப்பட்ட நாள் October 9, 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)