சினோப் மாகாணம்

சினோப் மாகாணம் (Sinop Province, துருக்கியம்: Sinop ili  ; கிரேக்கம்: Σινώπη‎ , சினோபி ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது கருங்கடலை ஒட்டி உள்ளது. இது 41 முதல் 42 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 34 முதல் 35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பு 5,862 கிமீ 2 ஆகும். இது துருக்கியின் மொத்த பரப்பளவில் 0.8% உள்ளது மாகாணத்தின். எல்லையானது மொத்தம் 475 கிமீ ஆகும். இதில் கடலோரப் பகுதி 300 கி.மீ நீளம், தரைப்பகுதி  175 கிமீ நீளம் கொண்டது. இதன் எல்லைகளாக மேற்கே கஸ்டமோனு, தெற்கே கோரம், தென்கிழக்கே சாம்சூன் போன்ற மாகாணங்கள் உள்ளன. மாகாண தலைநகராக சினோப் நகரம் உள்ளது.

சினோப் மாகாணம்
Sinop ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் சினோப் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் சினோப் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமேற்கு கருங்கடல்
துணைப்பகுதிகஸ்தமோனு
அரசு
 • தேர்தல் மாவட்டம்மூஸ்
 • ஆளுநர்Erol Karaömeroğlu
பரப்பளவு
 • மொத்தம்5,862 km2 (2,263 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்2,19,733
 • அடர்த்தி37/km2 (97/sq mi)
தொலைபேசி குறியீடு0368
வாகனப் பதிவு57

நிலவியல் தொகு

ஆறுகள் தொகு

மகாணத்தில் கோசலர்மக், கோகர்மக், சர்சக் çay, கராசு, அயன்காக் சுயு, டெப்சே, சாகரோஸ்லு, கன்லடெரே ஆகிய ஆறுகள் பாய்கின்றன. [2]

ஏரிகள் தொகு

மாகாணத்தின் ஸ்லாக்லே, சரகும் ஆகிய ஏரிகள் உள்ளன.

விரிகுடாக்கள் தொகு

மாகாணத்தில் ஹாம்சிலோஸ் விரிகுடா உள்ளது.

மாவட்டங்கள் தொகு

சினோப் மாகாணம் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அயன்காக்
  • பாயாபத்
  • டிக்மென்
  • துராசன்
  • எர்ஃபெலெக்
  • ஜெர்ஸ்
  • சாராய்தா
  • சினோப்
  • டர்கெலி

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Sinop geography (tr) பரணிடப்பட்டது 2012-05-10 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினோப்_மாகாணம்&oldid=3075032" இலிருந்து மீள்விக்கப்பட்டது