சிப்பியோட்டியல்
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
சிப்பியோட்டியல் (Conchology) என்பது மெல்லுடலிகளின் ஓடுகள் பற்றி அறிவியல் அடிப்படையிலான அல்லது பொழுதுபோக்கு ஆய்வுத்துறை ஆகும். இதை நத்தை இனங்களைப் பற்றி ஆய்வு செய்யும் துறையான நத்தையினவியலின் ஒரு பகுதியாகவும் பார்க்கலாம். நத்தையினவியல் நத்தை போன்ற மெல்லுடலிகளின் ஓட்டை மட்டுமன்றி அவற்றை முழுமையாக ஆய்வு செய்கிறது. சிப்பியோட்டியல், கடல்வாழ் மெல்லுடலிகளின் ஓடுகளை மட்டுமன்றி நிலத்திலும், நன்னீரிலும் வாழக்கூடிய மெல்லுடலிகளின் ஓடுகளையும் உள்ளடக்குகின்றது.
சிப்பியோட்டியல் தற்காலத்தில் சிலவேளைகளில் மெல்லுடலிகளின் உருவவியலில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரு தொல்வரலாற்று ஆய்வாகப் பார்க்கப்படுவது உண்டு. ஆனால் சரியானது அல்ல. எனினும் இவ்வோடுகள் நத்தை இனங்களை வகைப்படுத்துவது தொடர்பில் தகவல்களைத் தருகின்றன. வரலாற்று ஆய்வுகளைப் பொறுத்தவரை நமக்குக் கிடைக்கக்கூடிய நத்தையினங்களில் ஒரே உறுப்பு அவற்றின் ஓடுகளே. அருங்காட்சியகங்களில் கூட, இத்தகைய உயிரினக்களின் உலர் உறுப்புக்களே பெருமளவில் இருப்பதைக் காண முடியும்.
தலைக்காலிகள் (Cephalopods), சிறிய உள்ளோடுகளை மட்டுமே கொண்டுள்ளன. நாட்டிலாய்டீக்கள் (Nautiloidea) இதற்கு விதிவிலக்கு. நூடிபிராங்குகள் போன்ற மெல்லுடலிகள் தமது ஓடுகளை முற்றாலவே இழந்துவிட்டன. வேறு சில உயிரினங்களில் ஓடுகள் புரதத்தாலான தாங்கு அமைப்புக்களால் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், சிப்பியோட்டியலாளர்கள் நான்கு மெல்லுடலி வரிசைகள் பற்றியே கவனம் செலுத்துகின்றனர். இவை, காத்திரப்பொட்டுகள் (gastropods), இருவோட்டுடலிகள் (bivalves), பாலிபிளாக்கோபோராக்கள் (Polyplacophora), தட்டுக்காலிகள் (Scaphopoda) என்பன.