சியாரோஸ்கியூரோ
சியாரோஸ்கியூரோ (Chiaroscuro) என்பது, ஓவியத்துறையில், ஒளி, நிழல்களுக்கு இடையேயான வேறுபாட்டளவைக் (contrast) குறிப்பிடப் பயன்படும் ஒரு இத்தாலியச் சொல்லாகும். இது பொதுவாக ஓவியத்தின் முழுக்கூட்டமைவைப் பாதிக்கும் வகையில் அமையும் கடுமையான வேறுபாட்டளவையே பொதுவாகக் குறிக்கும். எனினும், மனித உடல் போன்றவற்றின் முப்பரிமாண அமைப்பை வெளிக்கொண்டு வருவதற்காக, கடுமையாக இல்லாவிட்டாலும், வேறுபாட்டைப் பயன்படுத்துவதை, ஓவியர்களும், ஓவிய வரலாற்றாளரும் இச்சொல்லால் குறிப்பர். இச்சொல், ஓவியம் தொடர்பில் மட்டுமன்றி, மரச் செதுக்குவேலை, திரைப்படம், ஒளிப்படங்கள் ஆகியவை தொடர்பிலும் பயன்படுத்தப்படுவது உண்டு.
சியாரோஸ்கோ வரைதலின் தோற்றம்
தொகுஇச்சொல் முதலில், ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தில் வழங்கிவந்த, நிறத் தாளில் வரையப்படும் ஒருவகை ஓவியத்தைக் குறிக்கவே பயன்பட்டது. இதுவும் ரோமர் காலத்திய ஊதா நிறமூட்டப்பட்ட தாளில் எழுதும் மரபின் தொடர்ச்சியே எனவும் கூறப்படுகிறது. இதே நுட்பத்தைப் பின்பற்றி போலச்செய்தலாக உருவாக்கப்பட்ட மரச் செதுக்கு வேலைகளும் இதே பெயரினால் அழைக்கப்பட்டன. இச் சொல்லின் பொருள் மேலும் விரிவடைந்து, ஓவியங்களின் ஒளி, நிழல் பகுதிகளுக்கு இடையிலான ஒளிர்வு வேறுபாடுகளைக் குறிக்கவும் பயன்படத்தொடங்கியது. தற்காலத்தில் இச்சொல்லுக்கான முதன்மைப் பொருள் இதுவே ஆகும்.
சியாரோஸ்கியூரோ உருவமைப்பு
தொகுசியாரோஸ்கியூரோ என்னும் சொல்லின் கூடிய தொழில்நுட்பப் பயன்பாடு, ஓவியம், வரைதல், அச்சடித்தல் போன்றவற்றோடு தொடர்புள்ள ஒளியுருவாக்க விளைவுகள் தொடர்பிலேயே இடம்பெற்றது. இவற்றில், நிழல், மிகையொளி என்பவற்றைப் பயன்படுத்தி முப்பரிமாணத் தோற்றம் பெறப்பட்டது. இது நிழற்றல் (shading) எனப்பட்டது.
படத் தொகுப்பு
தொகுஉருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: ஓவியம்
-
ஃபிரா அஞ்சலிக்கோ 1450 ஆம் ஆண்டிலேயே ஓவியத்தின் எல்லாக்கூறுகளிலும் சியாரோஸ்கியூரோ உருவாக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
-
பொட்டிசெல்லி யால் வரையப்பட்ட செயிண்ட் செபாஸ்ட்டியன், 1474.
-
Velázquez மென்மையான மிகையொளியையும், நிழற்றல்களையும், முகத்திலும் ஆடைகளிலும் பயன்படுத்தியுள்ளார்.
-
கூட்டமைவை உருவாக்குவதில், வெர்மியர், ஒளியைப் பயன்படுத்திய விதம் அசாதாரண சிக்கல்தன்மை கொண்டதும் மென்மையானதும் ஆகும்.
உருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: அச்சுப்பதிவும், வரைதலும்.
-
delicate engraved lines of hatching and cross-hatching, not all distinguishable in reproduction, are used to model the faces and clothes in this late 15th century engraving
-
மிகையொளியையும், நிழற்றலையும் காட்டும் இன்னொரு 15 ஆம் நூற்றாண்டுச் செதுக்குவேலை. எல்லா உட்புறக் கோடுகளும் கனத் தன்மையைக் காட்டப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
-
லியொனார்டோ டா வின்சியின் வரைதல்.
-
நிழற்றலின் நேர்கோட்டு உருவாக்கம் பிரதியிலும் தெளிவாகவே தெரிகிறது. டா வின்சியின் இன்னொரு ஆய்வு.
கூட்டமைவில் முக்கிய கூறாக சியாரோஸ்கியூரோ.
-
Allegory, Boy Lighting Candle in Company of Ape and Fool by El Greco
-
"சென் பீட்டரைச் சிலுவையில் அறைதல்" கரவாக்கியோ வரைந்தது.
-
எகிப்துக்கு ஓடுதல் ஆடம் எல்செய்மெர் வரைந்தது
-
நிலத்தோற்ற சியாரோஸ்கியூரோ, Jan Both
-
Nativity by Gerard van Honthorst
-
மேரி மக்தலீன், ஜார்ஜஸ் டி லா டுவர் வரைந்த ஓவியம்.
-
ரெம்பிராண்ட்டின், சிறையில் சென். பீட்டர்
-
The Proposition by Judith Leyster
-
ஆண்ட்டோயினே வத்தேயு - La Partie carrée
-
ஃபிரெகோனாட், பூட்டு, 1780
-
கோயா, ஒலிவ மலையில் கிறிஸ்து.
Chiaroscuro faces
-
ஜோஸ் டி ரிபேராவால் வரையப்பட்ட "செயிண்ட் ஜெரோம்"]]
-
சிவப்புடையில் ஒரு வயதானவர். ரெம்பிராண்ட்டின் ஓவியம்.
-
ஜான் எவெரெட் மில்லாயிஸ் தன்னைத்தானே வரைந்தது.
-
வில்லியம்-அடோல்ப் போகுவேரோவின் "பின்னல் வேலைசெய்யும் பெண்".
சியாரோஸ்கியூரோ மரச்செதுக்கும், வரைதலும்.
-
கவலைப்படும் மனிதன், நிறத்தாளில் வரைந்த சியாரோஸ்கியூரோ. 1516 இல் ஹான்ஸ் ஸ்பிரிங்கிங்கிளீ என்பவர் வரைந்தது.
-
Saturn, anon Italian, 16th? century. Italian style chiaroscuro woodcut, with four blocks, but no real line block, and looking rather like a watercolour.
-
Ludolph Buesinck, Aeneas carries his father. German style, with line block and brown tone block
-
Hendrick Goltzius, Pluto, woodcut
-
A 19th century version of the original type of chiaroscuro drawing, with coloured paper, white gouache highlights, and pencil shading.