சிரித்து வாழ வேண்டும்

எஸ். பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிரித்து வாழ வேண்டும் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1973 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த இந்தித் திரைப்படமான சஞ்ஜீர் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 30 நவம்பர் 1974 அன்று வெளியானது.[2] திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[3]

சிரித்து வாழ வேண்டும்
இயக்கம்எஸ். பாலசுப்பிரமணியன்
தயாரிப்புமணியன்
உதயா புரொடக்ஷன்ஸ்
வித்வான் வி. லக்ஸ்மனன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுநவம்பர் 30, 1974
நீளம்4447 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

ராமுவின் குழந்தைப் பருவத்தில் அவன் கண்ணெதிரே அவனது பெற்றோர் கொள்ளைக் கூட்டத்தினரால் படுகொலை செய்யப்படுகின்றனர். கொலைகாரனின் கையில் உள்ள சங்கிலியில் தொங்கும் குதிரை பொம்மை அவன் மனதில் பதிந்துவிடுகிறது. அந்த பயங்கரமான இரவின் நினைவோடு அவன் வளர்கிறான். ராமு வளர்ந்து காவல் ஆய்வாளராக ஆகிறான். கொள்ளைக் கூட்டத்தின் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனை ராமு சந்தித்து எச்சரிக்கிறான். இறுதிக் காட்சியில் கொள்ளைக் கூட்டத் தலைவனின் கையில் குதிரை பொம்மை கொண்ட கை சங்களியைக் காண்கிறான். இவன்தான் தன் பெற்றோரை கொன்றவன் எனபதை அதன் மூலம் அறிகிறான். இறுதியில் தன் பெற்றோரைக் கொன்ற அவனை பழிவாங்குகிறான்.

நடிகர்கள் தொகு

பாடல் தொகு

இப்படதிற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. ""ஒன்றே சொல்வான் (எண்ணத்தில் நலமிருந்தால்)""  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன், குழுவினர் 5:13
2. "நீ என்னை விட்டுப் போகாதே"  புலமைப்பித்தன்எல். ஆர். ஈசுவரி 3:45
3. "கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்"  வாலிடி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி 5:25
4. "பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ"  வாலிடி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் 2:59
5. "உலகம் என்னும்"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஷேக் சலமத் 5:09
மொத்த நீளம்:
22:31

வரவேற்பு தொகு

கல்கியின் காந்தன், படத்தின் தலைப்புக்கு ஏற்றதாக, பார்வையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்ய படத்தில் எதுவும் இல்லை என்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Narayanan, Sujatha (11 October 2019). "Amitabh Bachchan turns 77: How the veteran superstar established a strong South Indian base". Firstpost. Archived from the original on 19 June 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
  2. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
  3. (in ta) சாதனை நாயகன் எம்.ஜி.ஆர்.. Arulmozhi Publications. 1997. பக். 28. http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8l0U3&tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.. பார்த்த நாள்: 16 April 2021. 
  4. 4.0 4.1 ராம்ஜி, வி. (3 December 2022). "அமிதாப் கேரக்டரில் எம்ஜிஆர்: 'பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?'". காமதேனு. Archived from the original on 4 December 2022. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  5. "Sirithu Vazhavendum (1974)". Raaga.com. Archived from the original on 11 July 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  6. கௌசிகன் (22 December 1974). "சிரித்து வாழ வேண்டும்". Kalki. p. 43. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.

வெளி இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிரித்து வாழ வேண்டும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரித்து_வாழ_வேண்டும்&oldid=3838579" இலிருந்து மீள்விக்கப்பட்டது