சிர்மூர் இராச்சியம்
சிர்மூர் (Sirmur) (also spelled as Sirmor, Sirmaur, Sirmour or Sirmoor) இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆண்டனர்.[1]
சிர்மூர் இராச்சியம் सिर्मूर रियासत | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
![]() | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | பொ.ஊ. 1616 | |||
• | இந்தியப் பிரிவினை | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு | 4,039 km2 (1,559 sq mi) | |||
Population | |||||
• | 1901 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு | 1,35,626 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 33.6 /km2 (87 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா | ||||
Gazetteer of the Sirmur State. புது தில்லி: Indus Publishing. 1996. ISBN 978-81-7387-056-9. கணினி நூலகம் 41357468. |



இமயமலையில் அமைந்த சிர்மூர் இராச்சியம் 1198 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த இராச்சியத்தின் 1891 ஆம் ஆண்டு வருவாய் 300,000 ரூபாய் ஆகும்.
வரலாறு
தொகுகோர்க்கா மன்னர் ராணா பகதூர் ஷாவின் ஆட்சிக் காலத்தில், சிர்மூர் இராச்சியம், கார்வால் மற்றும் குமாவுன் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
பின்னர் பொ.ஊ. 1814–16ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவின் போது ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றிருந்த சிர்மூர் இராச்சியம் உட்பட கார்வால், குமாவுன் மற்றும் சிக்கிம் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
சிர்மூர் இராச்சியம் 1816 முதல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானமாக, இந்திய விடுதலை வரை இருந்தது. பின்னர் 1948ல் சிர்மூர் இராச்சியம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
தொகுமன்னர் பெயர் | ஆட்சித் துவக்கம் | ஆட்சி முடிவு |
---|---|---|
கரம் பிரகாஷ் | 1616 | 1630 |
மாந்தாதா பிரகாஷ் | 1630 | 1654 |
சோபாக் பிரகாஷ் | 1654 | 1664 |
புத்த பிரகாஷ் | 1664 | 1684 |
மத்த பிரகாஷ் | 1684 | 1704 |
ஹரி பிரகாஷ் | 1704 | 1712 |
விஜய் பிரகாஷ் | 1712 | 1736 |
பிரதாப் பிரகாஷ் | 1736 | 1754 |
கிராத பிரகாஷ் | 1754 | 1770 |
ஜெகத் பிரகாஷ் | 1770 | 1789 |
தரும பிரகாஷ் | 1789 | 1793 |
கரம் பிரகாஷ் II | 1793 | 1803 |
ரத்தன் பிரகாஷ், நேபாள ஷா வம்ச மன்னரால் நியமிக்கப்பட்டவர். பிரித்தானிய இந்தியாவின் அரசால் 1804ல் தூக்கிலிடப்பட்டவர். | 1803 | 1804 |
கர்ம பிரகாஷ் II (1820ல் இறப்பு) | 1804 | 1815 |
பதே பிரகாஷ் | 1815 | 1850 |
ரகுவீர் பிரகாஷ் (1827-1856) | 1850 | 1856 |
சாம்செர் பிரகாஷ் (1846 – 1898) | 1856 | 1898 |
சுரேந்திர விக்ரம் பிரகாஷ் | 1898 | 1911 |
அமர் பிரகாஷ் | 1911 | 1933 |
ராஜேந்திர பிரகாஷ் | 1933 | 1964 |
உதய் பிரகாஷ் | 1954 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சிர்மூர் இராச்சியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.