விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
: அடுத்ததாக ஆங்கிலம் பேசும் பெரும்பான்மையினர் '''பாலி''' என்றுதான் உச்சரிக்கிறார்கள் என்று எழுதியிருப்பதுடன் அதுதான் சரி என்றும் எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் கூட '''பாலி''' என உச்சரிப்பதில்லை. poly என்பதை உச்சரிப்பதில், அமெரிக்கர்களுக்கும், இங்கிலாந்துக்காரர்களுக்கும் கூட வேறுபாடு உள்ளது. அமெரிக்கர்கள் '''o''' என்பதை உச்சரிக்கும்போது கூடுதலான '''ஆ'''காரம் கொடுப்பது உண்மைதான். ஆனால் அவர்களும் '''ஆ''' வுக்கும் '''ஓ''' வுக்கும் இடையில்தான் உச்சரிக்கிறார்கள். நீங்கள் '''ஆ''' வை எடுத்துக்கொண்டீர்கள் நாங்கள் '''ஓ''' வை எடுத்துக்கொண்டோம். நிற்க, இந்தியாவிலும் கூட '''o''' வுக்குக் கூடுதலான '''ஆ'''காரம் கொடுத்து உச்சரிப்பது தமிழ் நாட்டவர்தான். வங்காளிகளோ, மலையாளிகளோ, குஜராத்திகளோ, மராட்டியரோ, மணிப்புரிகளோ, '''பாலி''' என்று உச்சரித்து நான் கேட்டதில்லை. '''பொலி''' என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆங்கிலேயர் தவிர்ந்த பல இனங்களைச் சேர்ந்த ஐரோப்பியர்களுடன் எனக்கு இங்கே பழக்கம் உண்டு. அவர்களும் '''பாலி''' என்று உச்சரிப்பதில்லை. பிலிப்பைன் மக்கள், color என்பதைக்கூட '''கொலொர்''' என்றுதான் உச்சரிப்பார்கள். இன்று ஆங்கிலம் ஒரு உலக மொழி. அதைப் பலரும் பலவிதமான உச்சரிப்புகளுடன் பேசிவருகிறார்கள். இதிலே அவரவர் தான் பேசுவதுதான் சரி என்று வாதிடுவது அர்த்தமற்றது. அதிலும் மற்றவர்களும் அதையே கடைப்பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதைவிட அர்த்தம் அற்றது. ஆங்கிலேயரே ஒருவர் COLOUR என்றால் இன்னொரு சாரார் COLOR என எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவரவர் முறைகளைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையா?
 
: அகராதியில் சும்மா பார்த்து '''பாலி''' என்று உள்ளதா '''பொலி''' என்றுள்ளதா என்று கண்டுபிடித்துவிடமுடியாது. [http://www.thefreedictionary.com/poly இங்கே] கிளிக் செய்து '''பாலி''' என்றுதான் உச்சரிக்கிறார்களா எனக் கேட்கவும். மேலும் இதே பக்கத்தில் poly என்பதற்கு அருகில் கொடுக்கப்பட்டுள்ள உச்சரிப்புக்கான குறியீட்டைப் பார்க்கவும். [[படிமம்:poly.jpg]] அக் குறியீட்டின் மீது கிளிக் செய்து, வரும் Pronunciation Key யில் poly என்பதில் வரும் '''o''' வை p'''o'''t என்பதில் காணும் '''o''' போல் உச்சரிக்கவேண்டும் எனக் குறித்திருப்பதைக் கவனிக்கவும். [[படிமம்:pronunciationPronunciatin key.jpg]]. p'''o'''t என்பதன் உச்சரிப்புக்கு [http://www.thefreedictionary.com/pot இங்கே] செல்லவும். நீங்கள் சொல்வதுபோல் '''பாலி''' என்பதே சரி என்றால், poly யில் வரும் '''o''' வுக்காக father இல்வரும் '''a''' இன் உச்சரிப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பார்கள் அல்லவா? [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 18:47, 30 ஜனவரி 2007 (UTC)
 
//'''ஆங்கிலேயரே ஒருவர் COLOUR என்றால் இன்னொரு சாரார் COLOR என எழுதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவரவர் முறைகளைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையா?'''//
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது