சீமை ஆல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:ஆலினம் சேர்க்கப்பட்டது using HotCat
file moved on Commons
வரிசை 20:
 
'''சீமை ஆல்''' (''Ficus elastica'') அல்லது '''சீமை ஆல்''' வடகிழக்கு [[இந்தியா]], [[இந்தோனீசியா]]வின் [[சுமாத்திரா]], [[ஜாவா]] போன்ற பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. பெரிய மரமான இது, ஃபைக்கஸ் தாவரச் சாதியில், ஆலமர வகையைச் சார்ந்தது. பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் [[விழுது]]கள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட [[நீள்வட்டம்|நீள்வட்ட]] வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் [[இலை]]களே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.
[[படிமம்:KoehFicus elastica - Köhler–s Medizinal-Pflanzen-206.jpg|left|thumb|கொயெஹ்லரின் (Koehler) மருத்துவத் தாவரங்கள் பற்றிய நூலிலிருந்து எடுக்கப்பட்ட படம். 1887]]
ஃபைக்கஸ் சாதியைச் சேர்ந்த ஏனைய தாவரங்களைப் போலவே இதன் பூக்களில் இடம்பெறும் [[மகரந்தச் சேர்க்கை]]க்கு ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த [[குளவி]]களே உதவுகின்றன. இது ஒரு வகையான கூட்டுருவாக்கத் தொடர்பின் (co-evolved relationship) அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. இதனால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவ வேறு உயிரினங்களைக் கவரவேண்டிய தேவை கிடையாது. எனவே, இந்த மரத்தில், கவர்ச்சியான நிறங்களைக் கொண்ட அல்லது [[மணம்]] பொருந்திய பூக்கள் இருப்பதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சீமை_ஆல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது