அபினிப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்ட...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:12, 2 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அபினிப் போர்களும், தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் கிங் பேரரசின் வீழ்ச்சிக்கு ஓரளவு காரணமாகின.

அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)

ஒல்லாந்தரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரித்தானியரும், அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்தே (1556-1605) இந்தியாவிலிருந்து அபினியை வாங்கிவந்தனர். 1757 இல், வங்காளத்தைக் கைப்பற்றிய பின்னர், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அபினியின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தனியுரிமையை நிலைநாட்டியிருந்தது. வேறு பயிர்களுக்கு இல்லாதவகையில், முன்பணம் கொடுத்து அபினி உற்பத்தியாளர்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த உற்பத்தி, கொல்கத்தாவில், பொதுவாக 400 விழுக்காடு இலாபத்துடன், ஏலத்தில் விற்கப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பனி (1773-1833)

1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, பாட்னாவிலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக மாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினிப்_போர்கள்&oldid=100425" இலிருந்து மீள்விக்கப்பட்டது