"அபினிப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1799 இல், சீனப் பேரரசு அபினி [[இறக்குமதி]] மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது:
 
: ''"அபினி வன்முறையான தாக்கத்தைக் கொடுக்கக்கூடியது. இதற்குப் பழக்கப்பட்டவர் அதனைப் புகைக்கும்போது, மிக விரைவாக அது அவரை உற்சாகப்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலைக்கு உள்ளாக்குகிறது. அதிக காலம் செல்லுமுன்னரே அது அவரைக் கொன்று விடுகிறது. அபினி, எமது நற் பழக்கங்களையும், நெறிமுறைகளையும் வலுவற்றதாக்கும் ஒரு [[நஞ்சு]]. இதன் பயன்பாடு சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, பொதுமக்கள், இதைத் [[தடுக்கப்பட்ட நகரம்|தடுக்கப்பட்ட நகருக்குள்]] கொண்டுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படியாது அதனை இகழ்கிறார்கள்!''"
 
: ''"இருந்தும், அண்மைக்காலத்தில், அபினியை வாங்குவோரும், அதனை உட்கொள்வோரும் அதிகமாகியுள்ளனர். ஏமாற்றுகின்ற வணிகர்கள் இலாபம் பெறுவதற்காக அதனை வாங்கி விற்கிறார்கள். ''சுங் வென்'' நுழைவாயிலில் உள்ள சுங்க இல்லம், இறக்குமதிகளை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டது (அபினிக் கடத்தல் தொடர்பான பொறுப்பு எதுவும் அதற்கு இல்லை). நாங்கள் அபினிக்கான தேடுதலைத் துறைமுகங்களில் மட்டும் நடத்துவது போதாது. ஐந்து நுழைவாயில்களிலும் உள்ள போலீஸ் ஆணையர்களுக்கும், போலீஸ் சென்சார்களுக்கும், அபினியைத் தடைசெய்யவும், அதற்காகத் தேடுதல் நடத்தவும் ஆணை பிறப்பிக்க வேண்டியுள்ளது. மீறுபவர்கள் யாராவது பிடிபட்டால், உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுவதோடு, அபினியும் உடனடியாக அழிக்கப்படும். அபினி நுழைகின்ற ''குவாந்துங்'' மற்றும் ''ஃபூக்கீன்'' மாகாணங்களைப் பொறுத்தவரை, அங்குள்ள, வைஸ்ராய்கள், ஆளுனர்கள் மற்றும் கடற் சுங்க அதிகாரிகளுக்கும், முறையான தேடுதல் நடத்தி அபினியின் வழங்கலை முற்றாகத் தடுக்குமாறு ஆணையிடப்படுகின்றது. அவர்கள் இதை ஒரு உயிரற்ற கடிதமாகக் கருதி அபினி கடத்தி வரப்படுவதை அநுமதிக்கக்கூடாது.''"
 
:: (Lo-shu Fu, A Documentary Chronicle of Sino-Western relations, Vol. 1 (1966), page 380)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/100431" இருந்து மீள்விக்கப்பட்டது