நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 77:
* [[சிந்தாமணி நிகண்டு]] (வல்வை ச.வைத்தியலிங்கம்பிள்ளை இயற்றியது)
* [[நீரரர் நிகண்டு]] ( ஈழத்துப் பூராடனார் இயற்றியது)
 
=== திவாகரநிகண்டு ===
திவாகரன் என்ற புலவரால் இயற்றப்பட்டதால் திவாகர நிகண்டு என்று அழைக்கப்படுகிறது.காலம் 9ம் நூற்றாண்டு. தன்னை ஆதரித்த சேந்தன் என்ற மன்னனை 19 இடங்களில் திவாகரர் இந்நூலில் குறிப்பிடுகிறார். எனவே, இந்நூல் சேந்தன்திவாகரநிகண்டு என்றும் அழைக்கப்படுகிறது.இந்நிகண்டு தமிழில் தோன்றிய முதல் நிகண்டு என்பதால் முதல் நிகண்டு,ஆதிநிகண்டு,ஆதிதிவாகரம் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. 2180 சூத்திரங்களைக் கொண்ட இந்நிகண்டு 12 பிரிவுகளையுடையது.தற்கால அகராதிக்கு இநநூல் முன்னோடி. 9500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் நூல்கள் பலபட கூறுகின்றன.இந்நூல் 12 பிரிவுகள் உடையது. இப்பிரிவுகள் பெயர்கள் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.
=== திவாகரத்தின் 12 பிரிவுகள் ===
# தெய்வப்பெயர் தொகுதி
# மக்கட் கெயர் தொகுதி
# விலங்குப் பெயர் தொகுதி
# மரப் பெயர் தொகுதி
# இடப் பெயர் தொகுதி
# பல்பொருள் பெயர்த்தொகுதி
# செயற்கைப் பெயர் தொகுதி
# பண்புப் பெயர் தொகுதி
# செயல் பற்றிய பெயர்த் கொகுதி
# ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
# ஒருசொல் பலபொருள் பெயர்த்தொகுதி
# பல்பொருள் ஒரு பெயர்த்தொகுதி
 
=== பிங்கல நிகண்டு ===
திவாகரரின் மாணவர் பிங்கலர் 10ம் நூற்றாண்டில் இதை எழுதினார். இநநூல் 10 பிரிவுகளில் 14700 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.பிங்கல நிகண்டு தமிழுக்கு ‘இனிமையும் நீர்மையும் தமிழ் ஆகும்’ என விளக்கம் தருகிறது.இவரையும் சமணர் என்றும் சைவர் என்றும் நூல்கள் பலபட கூறுகின்றன.
 
=== சூடாமணி நிகண்டு ===
வீரமண்டலபுருடர் என்பவர் 16ம் நூற்றாண்டில் இந்நூலை எழுதினார். 12 பிரிவுகளில் 11000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது. உரிச்சொல் என்ற பெயரில் நிகண்டுகள் வழங்கிவந்ததை இவரே நிகண்டு என்று முதன்முதலில் குறிப்பட்டார்.தொண்டை நாட்டிலுள்ள பெருமண்டூரைச் சார்ந்தவர்.கிருஷ்ணதேவராயரைப் பல இடங்களில் இந்நூல் குறிப்பிட்டுள்ளது.
 
=== கயாதரநிகண்டு ===
கயாதரர் என்னும் சைவசமயம் சார்ந்த புலவரால் 15ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது. 11 பிரிவுகளில் 10500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
 
=== அகராதிநிகண்டு ===
இரேவணர் என்னும் வீரசைவரால் 16ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது.10 பிரிவுகளில் 12000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
அகரவரிசையில் பெயர்களைத் தொகுத்துத் தருகிறார்.
 
=== அரும்பொருள்விளக்க நிகண்டு ===
அருமந்தையார் என்னும் சைவசமயம் சார்ந்த புலவரால் 18ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது. 18பிரிவுகளில் 12000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.இவரே முதன்முதலில் அகரவரிசையில் பெயர்களைத் தொகுத்துத் தருகிறார்.
 
=== பொதிகை நிகண்டு ===
சாமிநாதகவிராயர் என்னும் சைவரால் 18ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது.10 பிரிவுகளில் 14500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
 
=== பொருள்தொகைநிகண்டு ===
சுப்ரமணியபாரதியாரால்(மகாகவிசுப்ரமணியபாரதிஅல்ல) என்னும் சைவரால் 18ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது. 16 பிரிவுகளில் 1000 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
 
=== நாமதீபநிகண்டு ===
சிவசுப்ரமணியகவிராயர் என்னும் சைவரால் 19ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது.16 பிரிவுகளில் 1200 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
 
=== நானார்த்த தீபிகை ===
முத்துசாமிப்பிள்ளை என்னும் சைவரால் 19ம் நூற்றாண்டில்எழுதப்பட்டது.18 பிரிவுகளில் 5432 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.
 
 
 
 
 
==உசாத்துணை==
சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,
சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு,கண்மணப்பதிப்பகம்.,திருச்சி.
 
[[பகுப்பு:நிகண்டுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது