மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==வரலாறு==
[[இந்தியா]]வை [[இயற்கை]] வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. <ref name=DS>Davidson & Saberi 178</ref> [[மலேசியா]] போன்ற [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு]] ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், [[இந்தியா]]வில் உள்ள [[கேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]ப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. <ref>J. Innes Miller, ''The spice trade of the roman Empire'' (Oxford: Clarendon Press, 1969), p. 80</ref> மிளகு [[வாணிகம்]] மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
 
 
இடைக்காலத்தில் [[இந்தியா]]வின் [[கேரளாகேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]யில் விளைந்த மிளகு உலகமெங்கும் [[சந்தை]] படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், [[ஜாவா]], [[சுமத்திரா]], [[மடகாஸ்கர்]] போன்ற தீவுகளிலும், [[இந்தோனேசியா]], மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு [[சீனா]]விலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், [[ஐரோப்பா]]வின் மிளகு [[வணிகம்]] [[இந்தியா]]வை நம்பியே இருந்தது. <ref>Dalby p. 93.</ref>
[[இந்தியா]]வில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. [[லண்டன்|லண்டனில்]] டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.<ref> எஸ் இராம கிருஷ்ணன், 'கோடுகள் இல்லா வரைபடம்' பக்.22</ref> ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. <ref> 'Albuquerque- Caesar of the East' Edit& Trans R.F.Earle and John Villiers. University of Cambridge. London. 1982 </ref> ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, [[இந்தியா]]வுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே [[இந்தியா]]விற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது