மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
=== பண்டைய காலம் ===
[[Image:Italy_to_India_Route.PNG|right|250px|frame|ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியா வரை நீளும் மிளகு வணிக பாதை]]
மிளகை பண்டைய காலத்தில், [[இலத்தீன்]] மொழியில் ''பைப்பர்'' என்று குறிப்பிட்டனர்.பழம்பெரும் நாகரிகமான [[எகிப்து]] நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், [[பிரமிடு]]களில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்த்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்த்தின் அரசனான [[இரண்டாம் ராம்சிஸ்]] இறப்பின்போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய [[எகிப்து]] நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு [[இந்தியா]]விலிருந்து [[எகிப்து]] வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை.
 
பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, [[அரபிக்கடல்|அரபிக்கடலின்]] கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு [[வாணிகம்]] குறைந்த அளவிலே நடைபெற்றது.
[[Image:Italy_to_India_Route.PNG|right|frame|ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியா வரை நீளும் மிளகு வணிக பாதை]]
 
கி.மு. 30 இல், [[எகிப்து]] [[ரோம்|ரோமப் பேரரசின்]] பகுதியானபின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து [[அரபிக்கடல்|அரபிக் கடலின்]] வழியே [[ஐரோப்பா]]வுக்கு முறையான வணிகக் [[கப்பல்]] போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. [[ரோம்|ரோமப் பேரரசின்]] வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் [[கப்பல்]]கள் [[இந்தியா]]வுக்கு [[பருவக்காற்று]] காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட [[நறுமணப் பொருள்களும், [[முத்து]], [[வைரம்]] போன்ற கற்களும், [[மத்திய ஆசியா]]வில் உள்ள [[செங்கடல்]] வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, [[நைல்]] ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, [[மத்தியத் தரைக்கடல்]] வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் [[கப்பல்]] மூலமாக [[ரோம்]] நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது