வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 6:
 
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமைக்கு முற்றிலும் வேறுபட்ட பிற நாடாளுமன்ற முறைமைகளும் புழங்குகின்றன.
 
==முகனையான சிறப்பியல்புகள்==
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் முகனையான சிறப்பியல்புகளாக பின்வருவன பட்டியலிடப்பட்டுள்ளன; இவை அனைத்துமே வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அடித்தளமாகக் கொண்ட அனைத்து அரசியலமைப்புகளிலும் முழுமையாக பின்ப்பற்றுவதாகக் கொள்ள முடியாது.
* பெயரளவில் அல்லது சட்டப்படி செயலதிகாரத்தை அரசியலமைப்பின்படி கொண்டவரும் மேலும் பல [[ஒதுக்கப்பட்ட அதிகாரம்|ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை]] கொண்டவருமான [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவரைக் ]] கொண்டிருத்தல். இவரது தினப்படியான பணிகள் சடங்குசார் செயல்பாடுகளை நிகழ்த்துவதாக இருக்கும். காட்டாக, [[இங்கிலாந்து]] அரசி [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் II]], தன்னாட்சி பெற்ற பொதுநலவாய நாடுகளின் கவர்னர் ஜெனரல்கள், மாநிலங்களின் ஆளுநர்கள் ஆகும்.
* பொதுவாக [[பிரதமர்]] (PM), [[முதல்வர்]] அல்லது [[தலைமை அமைச்சர்]] என அழைக்கப்படும் [[அரசுத் தலைவர்]] (அல்லது செயல் தலைவர்). அரசுத் தலைவரை நாட்டுத் தலைவர் பணியில் அமர்த்தினாலும் அரசியலமைப்பு மரபின்படி பணியில் அமர்த்தப்படுபவர் நாடாளுமன்றதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் ஆதரவை பெற்றவராக இருத்தல் வேண்டும்.<ref name="oba">http://www.oba.org/En/ccl_en/newsletter_en/v13n1.aspx#Article_3</ref>
* அரசுத்தலைவர் தலைமையின் கீழ் சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையாலான ''நிகழ்நிலைப்படியான'' [[செயலாட்சியர்|செயலாட்சிப் பிரிவு]]. இந்த அமைச்சர்கள் செயலதிகாரத்தை பெயரளவிலான அல்லது கருதுகோள் அளவிலான செயலதிகாரி சார்பாக செலுத்துகின்றனர்.
*சட்டமன்ற எதிர்கட்சி (பல கட்சி அமைப்பு);
* தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்க அவை, பெரும்பாலும் ஒரு அவையேனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட [[ஈரவை]] அல்லது ஓரங்க அவை. இந்தத் தேர்தல்களில் தொகுதியில் முதலாவதாக வந்தவர் (விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கு எதிர்) வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவர். இதற்கு விலக்காக [[நியூசிலாந்து]] (இங்கு 1993 முதல் கலப்பு விகிதாச்சார பிரதிநிதித்துவம் பின்பற்றப்படுகிறது) [[இசுரேல்]] (நாடாளாவிய விகிதாச்சார பிரதிநிதித்துவம்), [[ஆத்திரேலியா]] (விருப்பத்தேர்வு முறைமை) உள்ளன.
* நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவைக்கு , (நிதிநிலை அறிக்கையை மறுத்து) ''வழங்கலை நிறுத்தி (அல்லது தடுத்தும்)'' அல்லது [[நம்பிக்கையில்லாத் தீர்மானம்|நம்பிக்கைத் தீர்மானத்தை]] நிறைவேற்றியும் அல்லது அரசின் [[நம்பிக்கைத் தீர்மானம்|நம்பிக்கைத் தீர்மானத்தை]] தோற்கடித்தும் அரசை நீக்க இயலும். வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அரசு தோற்கடிக்கப்படவும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படவும் இயலும்.
* நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படவும் தேர்தல்கள் நடத்தப்படவும் கூடும்.
* சட்டவாக்க அவையில் எந்த விதயத்தையும் குறித்தும், அவதூறு அறிக்கை அல்லது பேச்சுக்களின் தாக்கம் குறித்த அச்சமின்றி, உரையாடக்கூடிய [[சட்டமன்ற உரிமை]].
* அன்சர்த் எனப்படும் அவை நடைவடிக்கைக் குறிப்புகள் மற்றும் இவற்றிலிருந்து சில குறிப்புக்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம்.
 
வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் பலக் கூறுகளும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுபன்றத்தின் மரபுவழிகள், செயல்பாடுகள் மற்றும் முன்காட்டுகளைக் கொண்டு அமைந்தவை. ஐக்கிய இராச்சியத்தின் அரசியலப்பை முறையாக பதியப்படாவிடினும் இந்த முறைமையைப் பயன்படுத்தும் பல நாடுகளும் தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் இதனை பதிவாக்கி உள்ளன.
 
==தற்போதைய நாடுகள்==