டத்தோ ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
டத்தோ ஸ்ரீ விருது என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, [[துன்]] விருதிற்கு அடுத்த நிலையில் வரும் விருதாகும். [[டான் ஸ்ரீ]] விருதிற்கு இணையான விருது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ ([[மலாய்]]:''Datin Sri)'' என்று அழைப்பார்கள். மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ [[நஜீப் துன் ரசாக்|நஜீப் துன் ரசாக்கிற்கு]] இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களான [[மகதிர் பின் முகமது|மகாதீர் முகமது]], [[அப்துல்லா அகமது படாவி]] போன்றவர்களுக்கு, அவர்கள் பிரதமர்களாக இருந்தபோதே டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய [[துன்]] விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
 
===ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர் விருது===
 
டத்தோ ஸ்ரீ விருது என்பது ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுவதால் அந்த விருதை வழங்குவதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. [[சிலாங்கூர்]] மாநிலத்தைப் பொருத்த வரையில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ எனும் ''Seri Paduka Mahkota Selangor (SPMS)'' விருது ஓர் ஆண்டில் இருவருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உயிரோடு வாழ்பவர்களில் 40 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்று இருக்க முடியும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டத்தோ_ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது