தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:Heart Island 1 db.jpg|thumb|250px|ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆயிரந்தீவுகளில் ஒன்றான இதயத் தீவு, நியூயார்க்]]
'''தீவு'''அல்லது '''கடலிடைக் குறை''' என்பது நான்கு புறமும் [[கடல்]],ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு [[நிலம்|நிலப்]] பகுதியைக் குறிக்கும். உலகிலுள்ள தீவுகளுள் [[கிரீன்லாந்து]] மிகப் பெரியதாகும். [[இலங்கை]], [[அந்தமான் நிக்கோபர் தீவுகள்]] போன்றவை தீவுகளாகும்.
பிற நிலப்பகுதிகளுடன் செயற்கையாக நிலத்தொடர்பு (பாலங்கள் போன்றவை) உருவாக்கப்பட்டாலும் குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு எனக் கருதப்படலாம். [[சிங்கப்பூர்]], [[புங்குடுதீவு]] போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும்.
தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
==வகைகள்==
===கண்டத் தீவுகள்===
[[File:Britain and Ireland satellite image bright.png|right|thumb|200px|[[பிரித்தானியா]] தீவு]] ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் (Continental Islands) என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். [[இலங்கை]], [[பிரித்தானியா|பிரிட்டன்]], [[ஜப்பான்|ஜப்பானியத்]] தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
===கடல் தீவுகள்===
|