திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
 
இதன் இரண்டாம் பாடல், [[நெய்]] உண்ணமாட்டோம், [[பால்]] அருந்த மாட்டோம் என எவ்வித [[உணவு]] வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், [[கண்]]ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து [[மலர்]]களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , [[அன்னதானம்|பிச்சை]] முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
 
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், [[வயல்]]களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[தூக்கம்|துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
 
தாய்லாந்தில் திருப்பாவை, [[திருவெம்பாவை]] மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.<ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b</ref>. [[மார்கழி]] மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது