பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 192.8.222.80 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1008513 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 14:
[[பாரதிய ஜனதா கட்சி]] (பாஜக) [[இந்தியப் பொதுத் தேர்தல், 1989|1989 தேர்தலின்]] போது [[அயோத்தி சிக்கல்|அயோத்திச் சிக்கலை]] (அயோத்தி பிரச்சனை) தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது.<ref name="indtod">{{cite news|last=Sahgal|first=Priya|title=1990-L.K. Advani's rath yatra: Chariot of fire|url=http://indiatoday.intoday.in/site/Story/76389/A+school+for+parents.html|accessdate=29 September 2010|newspaper=India Today|date=December 24, 2009}}</ref> செப்டம்பர் 1990இல் பாஜக தலைவர் [[எல். கே. அத்வானி]] அயோத்திச் சிக்கலை நாடெங்கும் எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரதப் பயணத்தைத் (இரத யாத்திரை) தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
 
555
1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்பு நிகவுகளை விவரிக்கும் லிபரான் குழு அறிக்கை அத்வானி, ஜோஷி, விஜய் ராஜே சிந்தியா ஆகியோர் கரசேவகர்களை மசூதி மேலிருந்து கீழே இறங்கும்படி சுரத்தற்ற வேண்டுகோள்கள் விடுத்தனர் என்று சொல்கிறது. நல்லெண்ணத்துடன் இதைச் செய்தார்களா அல்லது ஊடகங்களின் கண் துடைப்புக்காகச் செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் கரசேவகர்களை கருவறைக்குள் நுழைய வேண்டாமென்றோ கட்டிடத்தை இடிக்க வேண்டாமென்றோ யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொள்ளாதது அவர்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடித்து விடவேண்டுமென்பதே அவர்கள் உண்மை அவா என்பதைக் காட்டுவதாக அந்த அறிக்கை சொல்கிறது. ராம் கதா குஞ்சில் இருந்த இவ்வியக்கத்தின் தலைவர்கள் நினைத்திருந்தால் எளிதாக மசூதி இடிப்பைத் தடை செய்திருக்க முடியுமென்றும் லிபரான் அறிக்கை கூறுகிறது.<ref>{{cite news|url=http://www.ndtv.com/news/india/report_sequence_of_events_on_december_6.php |title=Report: Sequence of events on December 6 |publisher=NDTV |date=November 23, 2009 |accessdate=2011-12-05}}</ref>
 
இந்நிகழ்வின் புகைப்படங்களும் காணொளிகளும் மிகவும் கோபம் கொண்ட மக்கள் கூட்டம் நிகழ்விடத்தைத் தாக்கி அழித்ததைக் காட்டுகின்றன. மதிய வேளையில், இளைஞர் சிலர் மசூதியின் மீது ஏறி நின்று கொடிகளைப் பொருத்தியும் தடிகளால் மசூதியை அடித்தும் இருந்தனர். அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகக் கீழிருந்தவர்களுக்குச் சைகைகளைக் காட்டினர். கையில் கிடைத்தவற்றை வைத்தே மக்கள்கூட்டம் அவ்வமைப்பினைச் சேதப்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது